முகப்பொலிவையும், பிரகாசத்தையும் தரும் ஃபேஸ் பேக்

glowing brighten
- Advertisement -

நம்முடைய மனதை பிரதிபலிக்கக் கூடிய ஒன்றாக தான் நம்முடைய முகம் திகழ்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. அந்த அளவிற்கு முகத்திற்கு அந்த காலத்திலேயே முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அதனால் தான் எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் முகத்தில் அதை வெளிப்படுத்தாமல் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நாம் நம்முடைய முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொண்டாலே போதும்.

கலை இழந்த முகத்தை பார்ப்பவர்கள் என்ன பிரச்சனை என்று கேட்பார்கள். இதே பிரகாசமான முகத்தை பார்ப்பவர்கள் வெளியில் கேட்காவிட்டாலும் தங்களுக்குள் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்கறது முகத்திலேயே தெரியுது என்று நினைத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு முகம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நம்முடைய முகத்தை பொலிவுடன் பிரகாசத்துடனும் வைத்துக் கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு பேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பல இயற்கையான பொருட்களை வைத்து நாம் பலவிதங்களில் பேஸ் பேக் செய்தாலும் இந்த இரண்டு பூக்களை மட்டுமே வைத்து நம்மால் எளிமையான முறையில் பேஸ்புக்கை செய்து விட முடியும். அந்த பூக்கள் தான் ரோஜா பூ மற்றும் குங்குமப்பூ. நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா என்று சொல்லக்கூடிய ரோஜாக்களை வாங்கி அதன் இதழ்களை உதிர்த்து நிழலில் நன்றாக காய வைத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்ய இயலாதவர்கள் நாட்டு மருந்து கடைகளிலேயே ரோஜாப்பூ பொடி கிடைக்கிறது. அதை வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ரோஜா பூ பொடி ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நான்கு குங்குமப்பூக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நாம் பேஸ்ட்டாக செய்வதற்கு முதலில் 1/2 ஸ்பூன் தேனை ஊற்ற வேண்டும். பிறகு தேவையான அளவு பன்னீரை ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு இதை தயார் செய்து கொள்ள வேண்டும். ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை நம்முடைய முகத்திலும் கழுத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். 15 நிமிடம் மட்டும் வைத்திருந்தால் போதும் பிறகு லேசான வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உடனடியான பொலிவையும் பிரகாசத்தையும் தரக்கூடியதாக இந்த ஃபேஸ் பேக் திகழ்கிறது. நாம் முகத்தை சுத்தம் செய்த பிறகு மறுபடியும் லேசாக பன்னீரை நம்முடைய முகத்தில் ஸ்பிரே செய்து கொள்வதன் மூலம் நம் முகத்திற்கு தேவையான இயற்கையான பிரகாசம் கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: பாத வெடிப்பு குணமாக அருமையான வீட்டு வைத்தியம்

மிகவும் எளிமையான அதே சமயம் அற்புதமான ரிசல்ட்டை தரக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை நாமும் முயற்சி செய்து பார்த்து பலனடைவோம்.

- Advertisement -