வேப்ப எண்ணெய் பயன்கள்

neem-oil

நமது நாட்டில் தோன்றிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். வேப்ப மரம் இந்திய நாட்டின் பூர்விக மரம். பழங்காலந்தொட்டே மருத்துவத்தில் வேப்ப மரத்தின் பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. “வேப்ப எண்ணெய்” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெயாகும். இந்த வேப்ப எண்ணெய் மூலம் நாம் பெறும் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் .

வேப்ப எண்ணெய் பயன்கள்

தோல் சுருக்கம்
வயது அதிகரிக்கும் போது நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

காயங்கள், தழும்புகள்

உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை வேப்ப எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது. காயங்களால் உடலில் அழுத்தமான தழும்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து அந்த இடங்களில் வேப்ப எண்ணையை தடவுவது நல்லது.

- Advertisement -

பாத நோய்கள்

மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளின்தொற்று சிலருக்கு ஏற்படுவதால் சேற்றுபுண்கள் ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை மேற்கூறிய இடங்களில் தடவி வந்தால் போதும்.

வயிற்று கிருமிகள்

இனிப்புகளை அதிகம் சாப்பிடும் குழந்தைகளில் பலருக்கும் அவர்களின் வயிறு மற்றும் குடல்களில் பூச்சி தொல்லைகள் ஏற்படக்கூடும். இதற்கு நவீன மருந்துகளை எடுத்துக்கொண்டாலும். அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணையை இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளை குடிக்க வைத்து விட்டால் அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, அவர்கள் மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறிவிடும்.

புற்று நோய்

வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

சொரியாசிஸ்

தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் வேப்ப எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்னையை குணப்படுத்தலாம்.

கொசுக்கடி

மலேரியா, டெங்கு, யானைக்கால் வியாதி மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாவதற்கு காரணமாக கொசுக்கள் இருக்கின்றது. வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்த்து கொண்டு உறங்குவதால், கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.

தலைமுடி

தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் இருக்கின்றன. இவற்றை போக்குவதற்கு வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு குளிக்க வேண்டும். மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வந்தால் நெடு நாட்களாக இருக்கும் ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்க பெறலாம்.

சைனஸ்

சைனஸ் என்பது நமது மூக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஜலதோஷம் பீடிக்கும் போது சேர்ந்து கொள்ளும் ஒரு திரவ நிலையில் இருக்கும் கோழை ஆகும். இந்த சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வேப்ப எண்ணெயின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

கொசு, விஷ பூச்சிகள்

பொதுவாக இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கொசுக்களின் தொல்லை அதிகம் இருக்கத்தான் செய்யும். கொசுக்கள் தொல்லை நீங்க கொசு உற்பத்தியாகும் தேங்கியிருக்கும் நீர்நிலை, பழைய குரல்கள், தென்னை சிட்டைகள் போன்ற இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணெய்யை தெளித்து வந்தால் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம். மற்ற பூச்சிவகைகளும் வீடுகளை அண்டாமல் விரட்டும்.

இதையும் படிக்கலாமே:
நுங்கு பயன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Veppa ennai benefits in Tamil. It is also called Veppennai uses in Tamil or Veppam ennai uses in Tamil or Neem oil benefits in Tamil or Veppa ennai maruthuvam in Tamil.