ஆயிரம் ஆயிரமாய் அழகு நிலையங்களுக்கு செலவழிக்கும் நீங்கள் கண்முன்னே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இந்த ஒரு பொருளை மட்டும் கண்டு கொள்வதே இல்லை! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விஷயம் தான் என்றாலும், சற்று புதிதாக முயற்சி செய்தால் நிறைய காசை நாமும் மிச்சப்படுத்தி பளபளவென்ற பளிங்கு முகத்தை கண்கூடாக பெறலாம். முகம் பொலிவு பெற இயற்கை குறிப்பு பற்றிய தகவல்களை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவில் அறிய இருக்கிறோம்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் இடத்தில் பத்து பைசா செலவு செய்யாமல் இதை முயற்சி செய்து பாருங்கள். ஒரு முறை முயற்சி செய்தாலே உங்களுக்கு நல்ல பலன் தெரியும். மஞ்சள் மற்றும் வேப்பிலை இரண்டுமே கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்தது தான், ஆனால் அதை பயன்படுத்துவதில் என்னவோ பலரும் சோம்பேறித்தனம் படுகின்றனர்.
உண்மையில் பெஸ்ட் ரிசல்ட் தரக் கூடிய இந்த ஒரு ஃபேஸ் பேக் பெண்களுக்கு நல்ல ஒரு சேமிப்பாக அமையும். முதலில் இதற்கு ஒரு பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 3 சிட்டிகை அளவிற்கு முகத்திற்கு பூசும் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். அரை ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் பேஸ்ட் போல செய்வதற்கு தேவையான வேப்பிலை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
வேப்பிலை இலைகளை கொத்தாக பறித்து வந்து நன்கு அலசி சுத்தம் செய்துவிட்டு கைகளால் நசுக்கினாலே சாறு எடுக்க முடியும். இல்லையென்றால் சிறிய உரலில் இட்டு கொஞ்சம் போல் தண்ணீர் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சாறை பிரஷ்ஷாகத் தான் பயன்படுத்த வேண்டும். பேஸ்ட் போல செய்து கொண்டதும், அதை முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவது போல கண்கள் மற்றும் உதடு பகுதிகளை தவிர எல்லா இடங்களிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
நன்கு உலர்ந்ததும் முகத்தை மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும். சில்லென்று வரக் கூடிய தண்ணீரிலும் முகத்தை காண்பித்து அலசிக் கொள்ளுங்கள். அதிகமான அழுத்தம் கொடுத்து முகத்தை துடைக்க கூடாது. இந்த ஃபேஸ் பேக் இயற்கையானது மற்றும் மிகவும் தொன்மையானது. இந்த காலத்திற்கு எல்லா சருமத்தினருக்கும் ஏற்ற பெஸ்ட் ரிசல்டையும் கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே:
சருமத்தில் சுருக்கம் விழாமல் இருக்க டிப்ஸ்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும். ஒரு மாதம் இப்படி செய்தாலே போதும், பளிங்கு போல முகம் வலுக்கிக் கொண்டு போகும். அந்த அளவிற்கு முகம் மாசுமரு இல்லாமல் மேடும் பள்ளமுமாக இல்லாமல், முகச்சுருக்கம் இல்லாமல், கருவளையம் எதுவும் இல்லாமல் பொலிவான மற்றும் மிருதுவான சருமம் போல பார்ப்பதற்கு உங்களுக்கே உங்களை ரொம்பவும் பிடித்து போய்விடும். இதனுடைய பெஸ்ட் ரிசல்ட் தெரிவதற்கு கூடுதலாக ஒரு மாதம் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு மாதம் செய்தவுடன் உங்களுக்கே திரும்ப திரும்ப செய்ய தோன்றும். முகத்தில் இருக்கும் அழுக்குகளை எல்லாம் உள்ளிருந்து வேரோடு நீக்கி சுத்தப்படுத்தி கொடுக்கக் கூடிய அற்புதமான பேக் இது! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, அனாவசியமான செலவுகளை தவிருங்க.