- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilசருமத்தில் சுருக்கம் விழாமல் இருக்க டிப்ஸ்

சருமத்தில் சுருக்கம் விழாமல் இருக்க டிப்ஸ்

- Advertisement -

நிறைய பேருக்கு சிறு வயதிலேயே முகத்தில் அதிகமாக சுருக்கம் விழ தொடங்கிவிடும். சருமத்தில் சுருக்கம் விழ தொடங்கி விட்டாலே எளிதில் வயதான தோற்றம் வெளிப்பட ஆரம்பிக்கும். சில பேர் 30 வயதை கடந்துமே வயதான தோட்டத்திற்கு தள்ளப்படுவார்கள். சில பேர் 40 வயதை கலந்தாலும் இளமையாக இருப்பார்கள். இந்த தோற்றத்திற்கு காரணம் என்ன. சுருக்கம் விழாத சருமம் தான்.

சருமம் நீண்ட நாட்களுக்கு பொலிவுடன் இளமையாக இருக்க வேண்டும், முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய வேண்டும் என்றால், நாம் என்ன செய்வது. ஒரு சில அழகு குறிப்புகளை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்க ஃபேஸ் பேக்

சரும சுருக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை ஆளி விதைக்கு உண்டு. ஆங்கிலத்தில் இதை ஃபிளாக் சீட் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் இந்த ஆளி விதை சுலபமாக எல்லோருக்கும் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக வைத்துக் கொள்ளுங்கள்.

2 டேபிள்ஸ்பூன் ஃபிளாக் சீட்ஸ் பவுடர், 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி இதை கலப்பதற்கு தேவையான ரோஸ் வாட்டர், இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து பேக் போல கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ளவும். முகத்தில் இருக்கும் மேக்கப்பை எல்லாம் ரிமூவ் செய்துவிட்டு, குளிர்ந்த நீரில் முகம் கழுவி விடுங்கள்.

- Advertisement -

பிறகு இந்த பேக்கை முகத்தில் போட்டு ஐந்து நிமிடம் வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்து விடவும். 10 நிமிடம் கழித்து முகத்தில் இருக்கும் பேக் நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை மீண்டும் கழுவி விட வேண்டும். சோப்பு போட்டு கழுவ கூடாது. சாதாரண தண்ணீரில் கழுவி அப்படியே விட்டு விடுங்கள்.

வாரத்தில் 2 நாள் இந்த பேக் போட்டு, வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக குறையும். உங்கள் முகத்தில் சுருக்கமே இல்லை என்றாலும், இந்த பேக்கை நீங்கள் வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்துவதன் மூலம் சுருக்கம் வருவதை நீண்ட நாட்கள் தள்ளிப் போட முடியும்.

- Advertisement -

என்னதான் மேலே அழகுக்காக சருமத்தில் பேக் போட்டுக் கொண்டாலும், மனதை எவ்வளவுக்கு எவ்வளவு ஆரோக்கியமாக சந்தோஷமாக வைத்துக் கொண்டு, எவ்வளவு சிரித்துக் கொண்டே இருக்கின்றோமோ, அந்த அளவுக்கு வயசான தோற்றமானது நம்மை விட்டு ரொம்ப தூரம் விலகி இருக்கும். உங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெங்காய ஷாம்பு தயார் செய்யும் முறை

ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். இந்த விஷயங்களோடு சேர்த்து மேலே சொன்ன பேஸ் பேக்கை போடும்போது, நிச்சயம் வயதான தோற்றம் தள்ளிப் போகும். இளமை தங்கி இருக்கும். இந்த அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பாருங்கள். அழகாக மாறிவிடுவீர்கள்.

சற்று முன்