வேரில் இருந்தே உங்கள் முடியை வலுவாக வளரச்செய்யும் வேப்பிலை ஹேர் பேக். முடியை நீங்களே பிடுங்கி எடுத்தாலும் ஒரு முடிகூட கொட்டாவே கொட்டாது.

hair4
- Advertisement -

நம்முடைய முடியை உதிராமல் வலிமையாக வளர்க்க வேப்பிலை பேக் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பேக்கை வாரத்தில் ஒருநாள் பயன்படுத்தலாம். முடியாதவர்கள் மாதத்தில் இரண்டு நாட்களாவது இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய ஸ்கால்ப்பில் எந்த ஒரு இன்பெக்சன் இல்லாமல், பொடுகு பேன் தொல்லை இல்லாமல், முடியை வளரச் செய்ய இது ஒரு பெஸ்ட் ஹேர் பேக்காக இருக்கும்.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நாம் பயன்படுத்தப் போகும் பொருட்கள் 3. பாச்சைபயறு 1 கைப்பிடி அளவு, வேப்பிலை 1 கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் 1 கைப்பிடி அளவு, முந்தைய நாள் இரவே ஒரு கைப்பிடி அளவு பச்சைப் பயிரை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊறவைத்த தண்ணீருடன் பச்சை பயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நன்றாக கழுவிய வேப்பிலைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, தேங்காய் துருவல் ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, மிக்ஸி ஜாரில் மொழுமொழுவென இந்த பேக்கை அரைக்க வேண்டும்.

- Advertisement -

ரொம்பவும்கெட்டியாக இந்த பேக்கை அரைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கொஞ்சம் தளதளவென அரைத்து மெல்லிசாக இருக்கும் காட்டன் துணியில் இந்த பேக்கை ஃபில்டர் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேக் கொஞ்சம் லிக்விட் பதத்தில் இருக்க வேண்டும். புதினா சட்னி கலரில் நமக்கு ஒரு பேக் கிடைத்திருக்கும். இந்த பேக்கை நம்முடைய தலையில் எப்படி அப்ளை செய்வது.

தலை முடியை முதலில் கவிழ்த்துப் போட்டு தலைக்குப் பின்பக்கம் இருக்கக்கூடிய இடத்தில், முடிக்கு அடிப்பக்கத்தில் இந்த பேக்கை முதலில் நன்றாக தடவி மசாஜ் செய்யுங்கள். காரணம் அந்த  இடத்தில்தான் பேன் பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். அதன் பின்பு தலைக்கு முன்பக்கத்தில் நன்றாக இந்த ஹேர் பேக்கை வைத்து மசாஜ் செய்து விடுங்கள். லிக்விட் ஹேர் பேக் என்பதால் இந்த பேக் உங்களுடைய முகத்தில் ஒழுகத் தான் செய்யும்.

- Advertisement -

ஸ்கால்ப்பில் எல்லா இடங்களிலும் படும்படி இந்த பேக்கை போட்டு விட்டு, அதன் பின்பு முடியின் நுனி வரை இந்த பேக்கை நன்றாக போட்டு முடியை சுருட்டி ஒரு கொண்டை கட்டிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு முடியை சுத்தமாக செய்து விட்டு, நன்றாக காய வைத்து விட்டு பாருங்கள். உங்களுக்கே உங்களுடைய முடியில் வித்தியாசம் தெரியும்.

வேப்பிலையோடு தேங்காயும் பாசிப்பயறும் சேர்த்து உங்களுடைய முடிக்கு ஒரு வலிமையை கொடுத்திருக்கும். ஒரு ஷைனிங் கொடுத்திருக்கும். மிகவும் ஒல்லியாக இருக்க கூடிய முடி கூட அப்படியே பவுசியா அடர்த்தியாக தெரியும். ஒரு வாட்டி ட்ரை பண்ணி தான் பாருங்களேன். இந்த ஹேர் பேக்கின் மகிமை உங்களுக்கே தெரியும்.

இதோடு மட்டுமல்லாமல் பச்சை பயிரை வாரத்தில் இரண்டு நாட்கள் சுண்டல் செய்து சாப்பிட்டு வர வேண்டும். அப்போது உங்களுடைய தலைமுடியும் சருமமும் மேலும் மேலும் அழகாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -