வேப்பிலை மருத்துவ குணங்கள்

vepillai-maruthuvam-1

நமது நாட்டில் பல வகையான மரங்கள் இருக்கின்றன. சில மரங்கள் அதன் மருத்துவ தன்மை காரணமாக இறைவனாக கருதி வழிபட படுகின்றன. அப்படியான இந்திய நாட்டிற்கேயுரிய ஒரு மரம் தான் வேப்ப மரம். பண்டைய நாட்களில் இந்தியாவிற்கு வருகை தந்த கிரேக்கர்களும் இந்த வேப்ப மரத்தின் மருத்துவ குணங்களை போற்றி தங்கள் நாட்டின் குறிப்புகளில் எழுதியுள்ளனர். அப்படியான வேப்ப மரத்தின் இலைகளுக்கு இருக்கும் சில நோய் நீக்கும் தன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

veppilai

வயிற்று பிரச்சனைகள்
கொழுந்து வேப்பிலைகள் மற்றும் வேப்பம் பூக்களை பச்சடி செய்தும் ரசமாக வைத்தும் உட்கொள்ள செரிமான கோளாறுகள் நீங்கும். குடல்களில் பூச்சி புழுக்களை போக்கும். மற்றும் வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றும்.

அம்மை நோய்

கோடைகாலங்களில் அதிக உஷ்ணத்தாலும், சில கிருமிகளின் தொற்றாலும் சிலருக்கு தட்டம்மை, பெரியம்மை, சின்னம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய காலங்களில் வேப்பிலைகளை நன்கு அரைத்து, உடல் முழுவதும் பூசி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை ஊற வைத்து, அந்த நீரை ஊற்றி குளிக்க அம்மை குணமாகும். இதை ஒரு வார காலத்திற்கு மேலாக செய்ய வேண்டும்.

veppilai

- Advertisement -

விஷ முறிவு

வேப்பிலை கொழுந்துகளை தினந்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு திறன் அதிகருக்கும். மேலும் பாம்பு மற்றும் இதர விஷ ஜந்துக்களிடம் கடிபடும் பட்சத்தில் வேப்பங்கொழுந்துகளை அதிகம் உண்ண விஷம் உடலில் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும். இதற்கு பின்பு முறையான விஷ நீக்க சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

Neem(Veppilai)

தோல் வியாதிகள்

நமது தோலில் வேர்க்குரு, அரிப்பு, படை, தேமல் போன்ற பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. வேப்பிலைகள் மற்றும் அதன் பூக்களை நன்றாக அரைத்து வாரத்திற்கு ஒரு முறை உடலெங்கும் பூசி, அது காய்ந்த பின்பு சற்று இதமான நீரில் குளித்து வர பல தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும்.

புற்று நோய்

வேப்பிலைகளில் இருக்கும் காரத்தன்மை புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது. சிறிது வேப்பிலை கொழுந்துகளை நன்றாக அரைத்து, மாதுளம் பழச்சாற்றுடன் கலந்து அருந்தி வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். புற்று நோய் பாதிப்பிலிருந்து காக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு வரும் விந்தக புற்று மற்றும் பெண்களுக்கு வரும் கருப்பை புற்றிலிருந்து காக்கும்.

Veppilai

பல் பிரச்சனைகள்

வேப்பிலைகளை பச்சையாக மென்று தின்ன அதன் சாறுகள் ஈறுகளில் படும் போது ஈறு சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும். பற்களில் சொத்தை ஏற்படாமல் இருக்கும். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

சுவாச கோளாறுகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளிப்புற கிருமி தொற்றால் ஏற்படும் நுரையீரல் மற்றும் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

caugh(irumal)

புண்கள்

வேப்பிலை இயற்கையாக கிடைக்கும் ரசாயன கலவையில்லாத ஒரு கிருமி நாசினியாகும். ரத்த காயங்களில் ரத்தம் வடிவது நின்ற பின் வேப்பிலைகளை நன்றாக அரைத்து, அதன் சாற்றை காயங்களில் விட தொற்று கிருமிகளை அழித்து காயத்தை வேகமாக ஆற்றும்.

இதையும் படிக்கலாமே:
கால் வீக்கம் குணமாக பாட்டி வைத்தியம்

இது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veppilai maruthuvam in Tamil. Neem leaf benefits are explained above and it is called as Veppilai maruthuva payangal in Tamil.