- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நிலக்கடலையில் இப்படி ஒரு சுவையான கட்லெட் செய்து கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் அனைவரும் விரும்பி...

நிலக்கடலையில் இப்படி ஒரு சுவையான கட்லெட் செய்து கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

- Advertisement -

வீட்டிலுள்ள ஒவ்வொரு பெண்களும் சமைக்கும் பொழுது தங்களின் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் செய்து கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகள் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றனர். சில உணவுகளை எவ்வளவு ருசியாக செய்து கொடுத்தாலும் அதனை வேண்டாம் என்று சொல்லி சாப்பிட அடம் பிடிப்பார்கள். இவ்வாறு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அந்த நேரத்தில் என்ன செய்து கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை பெற்றோருக்கு வந்துவிடும். இவ்வாறு அடம் பிடிக்கும் குழந்தையும் அழகாக சாப்பிட இந்த நிலக்கடலை கட்லெட்டை செய்து கொடுத்து பாருங்கள். இதில் உடலுக்கு தேவையான புரதச் சத்தும் அதிகமாக இருக்கிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான கட்லெடை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நிலக் கடலை – அரை கப், உருளைக்கிழங்கு – 1, பிரட் துண்டுகள் – 2, ரஸ்க் – 6, பச்சை மிளகாய் – 4, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பின் மீது வைத்து வேக வைக்க வேண்டும். உருளைக்கிழங்கை நன்றாக வெந்ததும் அதனை ஆற வைத்து, தோல் நீக்கி விட்டு, பிசைந்து வைத்துக்கொள்ளவும். பிறகு இரண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து, இந்த உருளைக்கிழங்குடன் சேர்த்து கொள்ள வேண்டும்

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 4 பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டு, அதனுடன் சிறிய துண்டு இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கொத்தமல்லியை தண்ணீரில் அலசி சேர்த்து, இவை மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த விழுதையும் உருளைக்கிழங்குடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து அரைகப் நிலக்கடலையை நன்றாக வறுத்து, அதனை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பொடியையும் உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஆறு ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொண்டு, அதனை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள மசாலா கலவையில் வேண்டிய வடிவங்களில் வட்ட வடிவிலோ, சதுர வடிவிலோ செய்து கொண்டு, அதனை இந்த ரஸ்க் தூளில் பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த கட்லட் துண்டுகளை அதன் மீது வைத்து பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.

சற்று முன்