- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இனி கஷ்டப்பட்டு மாவு பிசைஞ்சு தான் மிக்சர் செய்யணும்னு அவசியமே இல்ல. வெறும் 10 நிமிடத்தில்...

இனி கஷ்டப்பட்டு மாவு பிசைஞ்சு தான் மிக்சர் செய்யணும்னு அவசியமே இல்ல. வெறும் 10 நிமிடத்தில் இதோ இன்ஸ்டன்ட் மிக்சர் தயார். இந்த தீபாவளிக்கு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

தீபாவளிக்கு கடையில் காசு கொடுத்து தான் கிலோ கணக்கில் மிக்சர் வாங்குவோம். அப்படி இல்லையா, நம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்றால் கடலை மாவு பிசைந்து அதை எண்ணெயில் சுட்டு எடுத்து அதன் பின்பு மற்ற பொருட்களை எல்லாம் வறுத்து ஒன்றாக கலந்து மிச்சர் செய்வதற்குள் போதும் போதும் என ஆகும். ஆனால் இந்த தீபாவளிக்கு அந்த சிரமம் எல்லாம் தேவையில்லை. ஒரு பாக்கெட் சேமியா இருக்கா. நச்சுன்னு மொறு மொறுன்னு சூப்பரா இந்த மிக்சரை செய்து அசத்துங்க.

இந்த மிச்சரை நாம் சேமியாவில் தான் செய்யப் போகின்றோம். உப்புமா செய்யக்கூடிய மெல்லிசான சேமியாவில் செய்யக்கூடாது. பாயாசம் செய்யக்கூடிய கொஞ்சம் தடிமனான சேமியாவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கப்பில் சேமியாவை அளந்து எடுத்துக்கொண்டு, கொஞ்சமாக இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பக்குவம் எப்படி வருகிறது என்பதை தெரிந்து கொண்டு பிறகு நிறைய செய்து கொள்ளலாம்.

- Advertisement -

1 கப் அளவு சேமியாவை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 5 கப் அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு 1/2 ஸ்பூன், எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். அதில் எடுத்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு 90% வேக வைக்க வேண்டும். சேமியா குழைந்துவிட்டால் மிச்சர் சரியாக வராது. சேமியா வெந்தவுடன் அதை அப்படியே ஒரு சல்லடையில் ஊற்றி, வடிகட்டி விடுங்கள். வடிகட்டியில் கொட்டி வைத்திருக்கும் சேமியாவின் மேல் இரண்டு டம்ளர் பச்சை தண்ணீரை உடனடியாக ஊற்றி விடுங்கள். சேமியா குழையாது உதிரி உதிரியாக கிடைக்கும். (இந்த சேமியா நன்றாக ஆரி உதிரி உதிரியாக வர வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.)

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசி மாவு – 1/4 கப், கான்பிளவர் மாவு – 1/4 கப், கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் போட்டு எல்லா பொடியையும் ஒன்றாக கலந்து விடுங்கள். இதில் வேகவைத்த ஆற வைத்திருக்கும் சேமியாவை தண்ணீர் இல்லாமல் கொட்டி உங்கள் கையை கொண்டு உதிரி உதிரியாக பிசைந்து விட வேண்டும். சேமியாவில் இந்த மாவு ஒட்டி சேமியா உதிரி உதிரியாக நமக்கு கிடைத்திருக்கும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து இந்த சேமியாவை பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு செய்யுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு உதிரி உதிரியாக இருக்கும் இந்த சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறம் வரும் வரை பொறித்து எண்ணெயை வடிகட்டி எடுத்து, ஒரு வடிகட்டியில் போட்டு மீதம் இருக்கும் எண்ணியையும் நன்றாக வடிகட்டிக் கொள்ளுங்கள். இது நமக்கு ஓமப்பொடி போல கிடைக்கும்.

இந்த ஓமப்பொடியில் சில மசாலாக்களை வறுத்து சேர்க்க போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இடித்த பூண்டு பல் – 10, கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வேர்கடலை – 3 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, கருவேப்பிலை – 2 கொத்து, சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். இதோடு பொட்டுக்கடலை வேறு ஏதாவது அவல் தேவை என்றாலும் நீங்கள் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

இதையும் படிக்கலாமே: அட திருநெல்வேலி ஸ்பெஷல் பாரம்பரிய இடி சாம்பாரை இவ்வளவு ஈஸியா செய்யலாமா? வாங்க எப்படின்னு பாக்கலாம்.

இந்த பொருட்கள் எல்லாம் வறுபட்டு வந்த உடன் இதில் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், இந்த மசாலாவுக்கு மட்டும் உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், தேவைப்பட்டால் சாட் மசாலா – 1/4 ஸ்பூன், சேர்த்து அடுப்பை உடனடியாக அனைத்து அந்த சூட்டிலேயே இதை வறுத்து இந்த மசாலா எல்லாவற்றையும் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சேமியா ஓமப்பொடியில் கொட்டி ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து கொடுத்தால் சூப்பரான மிச்சர் தயார். இதை காற்று போகாத கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்தால் நான்கு ஐந்து நாட்கள் வைத்து சாப்பிடலாம். ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்