மனதில் வெறுப்பை வளர்க்கும் 5 ராசிகள்! இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

enemies-astro
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ராசிக்கு ஏற்ப பொதுவாக தனித்துவமாக விளங்குகிறார்கள். ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பதில்லை அதே போல ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விரல்களைப் போல தனித்துவமான சிறப்பம்சங்கள் கொண்டு விளங்குகிறார்கள். மனதிற்குள் வெறுப்பை வைத்துக் கொண்டு வெளியே சிரித்து சிரித்து பேசும் இந்த 5 ராசிக்காரர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு ராசிக்கும் இன்னொரு ராசிக்கும் ஆகாது என்பார்கள். அதே சமயத்தில் ஒரு ராசிக்கு சில ராசிகள் நண்பர்களாக எப்போதும் இருக்க முடியும் என்றும் கூறுவார்கள். தத்தம் ராசிகளுக்கு ஏற்ப இன்னொரு ராசிக்காரர்களுடன் நாம் பயணிக்கும் பொழுது அதற்கான விளைவுகளும் சில சமயங்களில் சந்திக்க நேர்கின்றன. அந்த வகையில் மனதில் வெறுப்பை வளர்க்கும் இந்த 5 ராசிக்காரர்கள் வெளிப்படையாக எதையும் கூறுவதில்லை.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஒரு சிலர் மிகுந்த ஆளுமை பண்பு உடையவர்களாக இருப்பார்கள். தாங்கள் தான் எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்கிற மனப்போக்கு இவர்களிடம் சற்று அதிகமாக காணப்படுகிறது. பத்து பேர் இருக்கும் இடத்தில் முதல் மூன்று இடத்தில் ஒன்றை பிடிக்க பல்வேறு திட்டங்களைத் தீட்டி வைத்திருப்பார்கள். எதையும் இவர்களுக்கு ரகசியமாக வைத்திருக்க தெரியாது. ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் புரணி பேசி வதந்திகளை பரப்பி விடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். நெருங்கிய நண்பர்கள் கூட இவர்களை மறைமுகமாக சற்று தள்ளி வைத்து தான் பார்ப்பார்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நெருப்பு போல செயல்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எதிலும் ஒரு வேகம் தென்படுகிறது. வேகம் விவேகம் அல்ல என்பது இவர்களுக்கு புரியாததால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகமாக காணப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதுவே பலவீனமாகவும் சில சமயங்களில் அமைந்து விடுகிறது. பதவி, புகழ் போதை கொண்டவர்களாக விளங்கும் இவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் தங்கள் வெறுப்பை மற்றவர்களுக்கு தெரியாமல் உமிழ்ந்து விடுவார்கள். என் வழி தனி வழி என்கிற புதுமையை விரும்பும் இவர்களிடமிருந்து நெருங்கியவர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே விலகி தான் இருப்பார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் அப்பாவியாக தோற்றமளித்தாலும், உள்ளுக்குள் ஒரு விஷத்தன்மை எப்போதும் ஒளிந்து கொண்டு இருக்கும். இவர்களை ஆரம்பத்தில் எளிதாக மற்றவர்களுக்கு பிடித்துவிடும் ஆனால் பழக பழக இவர்களின் சுயரூபம் தெரிய வரும். மற்றவர்களை எளிதாக தன் பேச்சாற்றல் மூலம் கவர்ந்து விடும் பேராயுதம் கொண்டு இவர்கள் விளங்குவதால் எளிதாக பல சமயங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள். இனிமையாக பழகினாலும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக செயல்படவும் துணிவார்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை வராத வரை அமைதியை கடைப்பிடிப்பார்கள். யாராவது தேவையில்லாமல் சீண்டிப் பார்த்து விட்டால் அவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. மற்றவர்களை கேலி, கிண்டல் செய்வதிலும் இவர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. ஆளுமை பண்பும், கடின உழைப்பும் இருக்கும் இவர்களுக்கு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போவதால் பல இடங்களில் வெறுப்புக்கு உள்ளாகிறார்கள்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் வித்தியாசமாக செயல்படுவார்கள். இவர்கள் இப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வர முடியாத அளவிற்கு குழப்ப நிலையில் நம்மை வைத்திருப்பார்கள். நாம் ஒரு முறை ஒரு விதமாக நினைத்தால், இன்னொரு முறை அதை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். அந்த அளவிற்கு காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் இவருடைய குணநலன்கள், பிடிவாத போக்கு மற்றவர்களை எரிச்சலூட்டும் வகையில் அமையும். இதனால் எதிரிகளின் அட்டவணையும் இவர்களுக்கு நீளும். செய்த தவறை ஒப்புக் கொள்ள இவர்களுக்கு மனம் வருவதில்லை.

- Advertisement -