முட்டை வைத்து இப்படி காரசாரமா முட்டை 65 செய்து பாருங்கள். தட்டு நிறைய கொடுத்தாலும் ஒரு துண்டு கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்

egg 65
- Advertisement -

முட்டையில் எந்த வகையான உணவு செய்து கொடுத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திருப்தியாக சாப்பிடுவார்கள். அவ்வாறு காய்கறி பிடிக்காதவர்களுக்கு கூட காய்கறியை பொரித்து, அதனுடன் ஒரு முட்டை சேர்த்து கலந்து கொடுத்தால் முட்டையின் சுவையில் காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடுவார்கள். இவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டை வைத்து செய்யும் இந்த காரசாரமான உணவு வகையை ஒருமுறை சுவைத்து விட்டால், மீண்டும் இதனை அடிக்கடி சுவைக்க வேண்டும் என்ற ஆசை வந்து விடும். அந்த அளவிற்கு இது அற்புதமான சுவையில் இருக்கும். இதனை சாப்பிடுவதற்கு சிக்கன் 65 சாப்பிடுவது போல் இருக்கும். வாருங்கள் இந்த முட்டை 65 எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 6, மிளகுத்தூள் – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சோள மாவு – ஒன்றரை ஸ்பூன், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், எலுமிச்சைச் சாறு – ஒரு ஸ்பூன், தயிர் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். மீதமிருக்கும் ஒரு முட்டையை உடைத்து அதன் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு, மஞ்சள் கருவையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டு.ம் பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு குழி பணியார கல்லை வைத்து, அதன் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் தடவ வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, குழிப்பணியாரக் கல்லில் ஊற்ற வேண்டும். சிறிது நேரத்தில் பணியாரம் வெந்து வந்ததும் அதன் மறு பக்கத்தைத் திருப்பிப் போட்டு, அனைத்தையும் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த முட்டை பணியாரம் அனைத்தையும் 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் தயிர் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தனியாக எடுத்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கரு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த மசாலாவுடன் வெட்டி வைத்துள்ள முட்டை குழிப்பணியாரத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள முட்டை மசாலாவை எண்ணையில் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான முட்டை 65 தயாராகிவிட்டது.

- Advertisement -