பெரிய இடத்து மனிதர்களின் நட்பை தரும் வேசி யோகம்

sooriyan

ஜோதிடம் மற்றும் விஞ்ஞானம் இரண்டின் அடிப்படையில் பார்த்தாலும் சூரியன் தான் உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு அவசியமான ஒரு கிரகம் அல்லது நட்சத்திரமாக இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் பொதுவாக சூரியனை பாப கிரகமாக கூறினாலும், ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நல்ல இடத்தில் இருந்தால் நற்பலன்கள் அதிகம் ஏற்படும். அப்படியான அந்த சூரியனை அடிபடையாக கொண்டு ஜாதகத்தில் ஏற்படும் “வேசி யோகம்” குறித்த சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sooriyan

ஒரு நபரின் ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் ராசிக்கு அடுத்த வீடான இரண்டாம் வீட்டில் சந்திரன், ராகு, கேது, ஆகிய கிரகங்களை தவிர்த்து மற்ற கிரகங்களில் ஏதேனும் ஒன்றோ, அல்லது மொத்த கிரகங்களும் அந்த இரண்டாம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கு “வேசி யோகம்” ஏற்படுகிறது.

இந்த வேசி யோகம் கொண்ட நபர்கள் எந்த ஒரு விடயத்தையும் மிக சரியாக திட்டமிட்டு, அதற்குண்டான பணிகளை செய்து வெற்றிபெறுபவர்களாக இருப்பார்கள். பிறந்ததிலிருந்தே பிறரை வழிநடத்தும் தலைமை பண்புகள் இவர்களிடத்தில் அதிகம் இருக்கும். இவர்களுக்கு எக்கச்சக்கமான நண்பர்கள் இருப்பார்கள், அதிலும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலுள்ள மனிதர்களுடன் இவர்களுக்கு நெருங்கிய நட்பு ஏற்படும். அவர்களால் இவர்களுக்கு ஆதாயம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு “சத்ரு ஜெயம்” எனப்படும் எதிரிகளை வெல்லும் ஆற்றல் இந்த யோகத்தால் உண்டாகிறது. சிலருக்கு தங்களின் எதிரிகளாலேயே பொருள் வரவு கிடைக்கும் அதிர்ஷ்டமும் உண்டாகும். வேசி யோக ஜாதககாரர்களுக்கு பிறரை வசீகரிக்க கூடிய முக அமைப்பு, பேச்சு, நடத்தை போன்றவை இருக்கும். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

attraction

இந்த யோகம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சுலபத்தில் எதிர்பாலினத்தவர்களை தங்களின் பக்கம் கவர்ந்திழுத்து விடும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். வேசி யோகத்தில் சூரியனுக்கு அடுத்த இரண்டாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள் சுப கிரகங்களாக இருக்க வேண்டும் அல்லது சுபகிரக பார்வையாவது பெற்றிருக்க வேண்டும். பாப கிரகங்கள் அந்த வீட்டில் இருந்தாலோ அல்லது பாப கிரகங்களின் பார்வை அந்த வீட்டின் மீது இருந்தாலோ அந்த ஜாதகத்திற்குரிய நபர் ஆண், பெண் யாராக இருந்தாலும் இல்லற வாழ்வில் ஒழுக்கம் தவறி போகும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தான் இந்த யோகத்திற்கு “வேசி” யோகம் என்ற பெயர் ஏற்பட்டது.

இதையும் படிக்கலாமே:
சொந்த உழைப்பின் மூலம் செல்வந்தனாக்கும் சுனபா யோக பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vasi yogam in Tamil or Vasi yogam palangal in Tamil. It is an astrology tips in Tamil is here.