வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க வழிபாடு

vetri valipadu
- Advertisement -

முழு நம்பிக்கையுடன் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அந்த தெய்வம் நம்முடைய கஷ்ட காலத்தில் நமக்கு வந்து உறுதுணையாக இருக்கும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக திகழக் கூடியது தான் பக்த பிரகலாநாதனின் கதை. இது அனைவரும் அறிந்த கதையே. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக நரசிம்மர் திகழ்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட நரசிம்மரை எந்த நாளில் நாம் வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோல்விகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் ஏற்படும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நரசிம்மர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக நரசிம்மரை நாம் முறையாக வழிப்பட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லைகளும், தீய சக்திகளின் தொல்லைகளும், கடன் பிரச்சனை போன்ற பலவிதமான பிரச்சனைகளும் முழுமையாக நீங்கும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்ற தெய்வமாக தான் நரசிம்மர் திகழ்கிறார். இந்த நரசிம்மரை உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்று நாம் வழிபடலாம். உக்கிர நரசிம்மரை வழிபடும் பொழுது எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

யோக நரசிம்மரை வழிபடும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி நீங்கும். லட்சுமி நரசிம்மரை வழிபடும் பொழுது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். இப்படி ஒவ்வொரு நரசிம்மருக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் ஏற்பட்டாலும் பொதுவாக நாம் நரசிம்மரை எந்த முறையில் வழிபட்டால் நம் வாழ்வில் வெற்றிகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை எந்த நாள் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நரசிம்மர் அவதாரம் எடுத்த நாளான பிரதோஷ நாள் அன்று குறிப்பாக பிரதோஷ வேளையில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். பிரதோஷமானது எப்படி சிவபெருமானுக்கு உகந்த நாளாக திகழ்கிறதோ, அதே போல் தான் நரசிம்மர் உதயமான நாளும் பிரதோஷ நாள். அதனால் பிரதோஷ தினத்தன்று நரசிம்மரை அதுவும் குறிப்பாக அவர் உதயமான பிரதோஷ வேளையில் வழிபடுவது என்பது மிகவும் நன்மையை தரும்.

அந்த பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையில் அருகில் இருக்கும் நரசிம்மர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது யாருக்கு பிரச்சினைகள் இருக்கிறதோ அவர்கள் தங்கள் கைப்பட 64 எலுமிச்சம் பழங்களை மாலையாக கோர்த்து நரசிம்மருக்கு கொடுக்க வேண்டும். அதோடு துளசி மாலையும் அணிவித்து வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கற்கண்டு, தாமரை மலர்கள் இவற்றை வைத்து நரசிம்மருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு அங்கேயே அமர்ந்து நரசிம்மரிடம் தங்களின் வேண்டுதலை முழுமையாக கூறி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: குடும்ப நன்மைக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

இப்படி ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்று நாம் நரசிம்மரை வழிபட வழிபட நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோல்விகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் நம்மை தேடி வரும்.

- Advertisement -