- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையை வளமாக்கும் வெற்றிலை பரிகாரம்

வாழ்க்கையை வளமாக்கும் வெற்றிலை பரிகாரம்

- Advertisement -

நம் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைப்போம். அந்த செயலில் வெற்றி அடைந்தால் நம்முடைய வாழ்க்கையே மாறிவிடும் என்ற சூழ்நிலை கூட இருக்கலாம். அந்த செயலை செய்வதற்கு முன்பாக அந்த செயல் வெற்றிகரமாக நடந்துவிட வேண்டும் என்பதற்காக சில வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். அது பரிகாரமாகவும் இருக்கலாம், வழிப்பாடாகவும் இருக்கலாம். நம்முடைய இஷ்ட தெய்வத்தையோ, குலதெய்வத்தையோ நினைத்து வேண்டுதல்களை முன்வைத்து நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேற வேண்டும் என்று வேண்டிக் கொள்பவர்கள். இது போலவே பரிகார முறைகளும் இருக்கின்றன. அந்த பரிகாரங்களில் ஒன்றான வெற்றிலை பரிகாரத்தை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நாம் எந்த தெய்வத்தை வழிபடுவதாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை வைத்து சமர்ப்பித்து வழிபாடு செய்வோம். இந்த பொருட்கள் அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவான ஒன்றாகவே கருதப்படுகிறது. அதில் இருக்கக்கூடிய வெற்றிலை என்பது வெற்றிகளை தரக்கூடிய இலை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வெற்றிலையில் பல மருத்துவ குணம் இருப்பது போலவே மகத்துவ குணமும் இருக்கின்றது. வெற்றியை வைத்து பல பரிகாரங்கள் இருந்தாலும் நாம் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கும், கோரிக்கைகள் நிறைவேறுவதற்கும் செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

முதலில் நாம் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்றால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும். அப்படி வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதற்கு வெற்றிலையை தோரணமாக நம் வீட்டு நிலை வாசலில் கட்ட வேண்டும். பொதுவாக மாவிலையில் தான் தோரணம் கட்டுவோம். அது போலவே வெற்றிலையில் நாம் தோரணம் கட்டும் பொழுது அது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கக்கூடியதாக திகழ்கிறது. வெற்றிலை வாடியவுடன் அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக வெற்றிலையை தோரணமாக கட்டிவிடலாம்.

அடுத்ததாக நாம் எடுக்கும் முயற்சி வெற்றி அடையுமா? அடையாதா? என்பதை தெரிந்து கொள்வதற்காக செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பார்ப்போம். ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுது அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று பத்து ரூபாய்க்கு வெற்றிலையை வாங்க வேண்டும். வீட்டிற்கு வந்து அந்த வெற்றிலையை எண்ணி பாருங்கள். அது ஒற்றைப்படையில் வந்தால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும் என்று அர்த்தம். இரட்டைப்படையில் வந்தால் அந்த காரியம் நடைபெறுவதில் தடைகள் உண்டாக்கும் என்று அர்த்தம்.

- Advertisement -

ஒற்றைப்படை வந்துவிட்டால் அதில் நல்ல வெற்றிலையாக பார்த்து ஒரு வெற்றிலையை எடுத்து அதில் மூன்று மிளகை வைத்து கட்டி பூஜை அறையில் குலதெய்வத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். மூன்று நாட்கள் கழித்து அதை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றி கரமாக நடந்துவிடும்.

அடுத்ததாக நாம் வைக்கும் கோரிக்கைகள் வெற்றி அடைவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பார்ப்போம். ஒரு வெற்றிலையை எடுத்து தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஈரம் இல்லாமல் அதை துடைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை வைத்து, அந்த பச்சை கற்பூரத்திற்கு மேலாக ஒரே ஒரு சொட்டு சுத்தமான தேங்காய் எண்ணெயை விட வேண்டும்.பிறகு அதை பற்றி வைக்க வேண்டும். அது முழுமையாக எரிந்து முடியும் வரை என்ன கோரிக்கை நம் மனதில் இருக்கிறதோ அதை நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தோம் என்றால் விரைவில் நாம் வைத்த கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணம் தரும் பெருமாள் பரிகாரம்

வெற்றிலையை வைத்து பல பரிகாரங்கள் இருந்தாலும் நம்முடைய வாழ்க்கைக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய இந்த எளிமையான மூன்று பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்