இந்த தண்ணீர் உங்கள் வீட்டில் இருக்கும் வரை தோல்வி என்பது உங்கள் பக்கமே வராது. வெற்றியை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள இது மட்டுமே போதும்.

water1

வெற்றியை நமக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், முதலில் நம்மிடம் சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருக்கவே கூடாது. ‘பிறகு செய்து கொள்ளலாம்’ என்று ஒரு வேலையை தள்ளிப் போடவே கூடாது. நாளை செய்யக்கூடிய வேலையை, தேவைப்பட்டால் இன்றே செய்து கொள்ளலாமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் இன்றைக்கு உண்டான வேலையை நாளைக்குத் தள்ளிப் போடவே கூடாது. பிறகு செய்து கொள்ளலாம், நாளை செய்து கொள்ளலாம் என்று சாக்கு சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி காண முடியாது. முன்னேறவும் முடியாது. மேல் சொன்ன விஷயம் உங்களிடம் இருந்தால், இன்றிலிருந்து அதை திருத்திக் கொள்ளுங்கள். அதன் பின்பு, பின்வரும் பரிகாரத்தை செய்யுங்கள்.

family fight

அதேபோல் மன நிம்மதி இல்லை, வீட்டில் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கின்றது. எதிர்மறை ஆற்றலின் மூலம் வீட்டில் இருப்பவர்களுடைய மனதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த நேரமும் உடல் அசதி, உடல் சோர்வு மனச்சோர்வு இருந்து வந்தாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைப்படும். அதற்கு ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சில்வர் பாத்திரமாக இருந்தாலும் சரி, அதில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை ஊற்றி, ஐந்து பிரியாணி இலைகளைப் சிறிய சிறிய துண்டுகளாக உடைத்து போட்டுக் கொள்ளுங்கள். 5 லிருந்து 7 பல் பூண்டையும் தோலுரித்து இரண்டாக வெட்டி அதே தண்ணீரில் போட்டு விடுங்கள்.

biriyani-ilai

இந்தத் தண்ணீரை உங்களுடைய வீட்டு வரவேற்பறையில் அப்படியே திறந்தபடி அல்லது மூடியபடி கூட ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். மொத்தமாக தட்டை போட்டு மூடிவிட வேண்டாம். ஒரு லேசான துணியை போட்டு மூடி வைக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தண்ணீரில் பிரியாணி இலையும் பூண்டும் நன்றாக ஊறி அதிலிருந்து லேசான நறுமணம் வெளிவரும்.

இந்த நறுமணம் வீட்டில் இருப்பவர்களுடைய மனதினை அமைதிப்படுத்தும். உடல் சோர்வை நீக்கும். தேவையற்ற சண்டை சச்சரவுகள் நம் வீட்டில் வரக் காரணமாக இருக்கும் எதிர்மறை ஆற்றல்களையும், கண் திருஷ்டியும் அகன்றிவிடும். இந்த தண்ணீரில் இருந்து வெளிவரும் வாசம் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சோம்பேறித்தனம், உங்கள் உடலை விட்டு நீங்குவதற்கு உதவியாக இருக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

poondu

ஆனால் ஏழு நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரையும் இதில் உள்ள பொருட்களையும் கால் படாத இடத்தில் ஊற்றி விட்டு, மீண்டும் புதியதாக வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய வீட்டில் நல்ல மாற்றம் ஏற்படுவதை உணரலாம். நிம்மதி இல்லாத வீட்டிலும் நிம்மதியான வாழ்க்கையை வாழ, தோல்வி உங்கள் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருக்க, வெற்றியை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள சொல்லப்பட்டுள்ள சுலபமான தாந்த்ரீக பரிகாரங்கள் இதுவும் ஒன்று. நம்பிக்கையோடு முயற்சி செய்து பார்த்தால் நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.