நீங்கள் எதை செய்தாலும் தோல்வியா? எதிலும் வெற்றி பெற வெற்றிலையை இப்படி மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் போதும்!

தொடர் வெற்றிகள் என்பது அதிகப்படியான தோல்விகளை சந்தித்த பின் தான் ஏற்படும். பெரும்பாலானோருக்கு எடுத்தவுடனேயே வெற்றிகள் கிடைப்பதில்லை. வெற்றிகள் என்பது வாழ்க்கையில் ஒரு வரம் போன்றது ஆகும். அது சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடாது. எல்லா தடைகளையும் தகர்த்து எறிந்து படிக்கற்களாக மாற்ற விடாமுயற்சி செய்வது கட்டாயமாகும். தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் வெற்றிலை! என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vetrilai-kodi

வெற்றிலை என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் ஒரு மகத்துவமான இலையாகும். வெற்றிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்று கூறும் அளவிற்கு மருத்துவ ரீதியாகவும் வெற்றிலை நிறைய பலன்களை கொடுக்கும். அத்தகைய மகிமை நிறைந்த வெற்றிலையை வீட்டில் வளர்ப்பது அதிர்ஷ்டம் தரும் ஒரு வாஸ்து பரிகாரம் என்று கூட சொல்லலாம். ஆனால் வெற்றிலையை தனியாக வளர்க்கக் கூடாது என்றும் கூறப்படுவது உண்டு.

தோஷங்களை நீக்கும் வெற்றிலையை காம்பு நீக்கி பரிகாரத்திற்கு பயன்படுத்துவது தான் முறையாகும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது எனவே அவற்றை நீக்கிவிட்டு பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். வெற்றிலை எந்த அளவிற்கு வெற்றியை கொடுக்குமோ! அதே அளவிற்கு வெண்கடுகு ஒருவருக்கு காரிய வெற்றியை கொடுக்கும் பொருளாகும். நீங்கள் ஒரு விஷயத்திற்காக வெளியில் செல்கிறீர்கள் அல்லது ஏதாவது ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த எளிமையான பரிகாரத்தை வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.

venkadugu

ஆன்மீக ரீதியாக வெண்கடுகு திருஷ்டியை போக்க வல்லது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் வெண்கடுகு மனதில் நினைக்கும் வேண்டுதல்களை பலிக்கவும் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது. வெண்கடுகை திருஷ்டி சுற்றி விட்டு எரியும் நெருப்பில் வெண்கடுகை போட்டால் அது எப்படி படபடவென்று வெடிக்குமோ! அதே மாதிரி உங்கள் மேல் இருக்கும் திருஷ்டிகளும் வெடித்து சிதறிவிடும் என்பது ஐதீகம்.

இந்த வெற்றிலையை காம்பு நீக்கி அதில் சிறிதளவு வெண்கடுகு போட்டு மடித்து வைக்க வேண்டும். இதற்கு மஞ்சள் அல்லது சிவப்பு நிற நூல் கொண்டு நன்றாக இறுக்க கட்டிக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் காரிய வெற்றிக்காக செல்லும் பொழுதெல்லாம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் செல்லும் காரியம் ஜெயமாக முடிந்த பின்னர் வீட்டிற்கு வந்து இதனை நெருப்பில் போட்டு எரித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களிடம் இருக்கும் நேர்மறை சக்திகள் விலகிவிடும் என்பது நம்பிக்கை.’

praying-god1

சுபகாரிய முயற்சிகளுக்கு தடைகள் தொடர்ந்து உங்களுக்கு ஏற்படும் பொழுது இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து பார்க்கலாம் நல்ல பலன் தரும். அல்லது வேலை கிடைக்க வேண்டி அலைந்து கொண்டு இருக்கிறீர்களா? எவ்வளவு முயற்சி செய்தாலும் வேலை கிடைக்க காலதாமதம் ஆகிக் கொண்டே இருக்கும் பொழுது இந்த பரிகாரத்தை செய்யலாம்! அதுபோல் முக்கிய நபர்களை சந்திக்க செல்லும் பொழுது ஏற்படும் தடைகள் நீங்க, நல்ல வரன் அமைய, வெளியில் கிளம்பும் பொழுது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இட இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம் இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியாக மாற இந்த பரிகாரத்தை செய்வது மிகுந்த பலன்களை கொடுக்கும்.