மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற இந்த வார்த்தையைச் சொல்லி, இந்த குறியீட்டினை உங்கள் வீட்டு பூஜை அறையில் இப்படி எழுதி வைத்தாலே போதுமே. பணம் குவியும்.

mahalashmi1

மகாலட்சுமியின் அனுகிரகத்தை பெற்றுத்தரக் கூடிய சூட்சமமான பரிகாரங்களில், இன்று நாம் பார்க்கப் போகும் இந்த பரிகாரமும் ஒன்று. வெற்றி நம் பக்கம் இருக்க அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்றாலே போதும். வெற்றியானது நம் பக்கம் வந்து விட்டால், அந்த வெற்றியே பலவகைகளில், செல்வங்களை நமக்கு தேடித் தந்து விடும். செல்வ செழிப்பு வேண்டும், பணம் காசு வேண்டும் என்று நாம் இயல்பாகவே பல முயற்சிகளை எடுப்பது உண்டு. இருப்பினும் வெற்றி அடைவதற்கு, நமக்கு மன உறுதியும், மன சக்தியும், அவசியம் தேவை. மனவுறுதியை பெறாதவர்கள், விடாமுயற்சியை விட்டுக் கொடுப்பார்கள் கோழைத்தனமாக இருப்பவர்களுக்கு, வெற்றி நிச்சயம் சொந்தம் ஆகாது. வெற்றி இல்லாத இடத்தில் மகாலட்சுமி குடி கொள்ளவே மாட்டாள்.

சில பேர் சொல்லுவார்கள், அதிர்ஷ்டம் இருந்தால் மகாலட்சுமி நம்மைத் தேடி வருவாள் என்று! அந்த அதிர்ஷ்டம் கூட வெற்றியின் பக்கம் தான் நிற்கும் என்பது சிலருக்கு புரிவதில்லை. சரி, வெற்றியை நம் பக்கம் வசமாக்கிக் கொள்ள, மனதைரியத்தை அதிகரித்துக் கொள்ள, சக்தி வாய்ந்த மனிதராக மாற, மகாலட்சுமியை நினைத்து நம் வீட்டுப் பூஜை அறையில் எப்படி பூஜை செய்ய வேண்டும். தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒரு பூஜையை தொடங்குவதற்கு முன்பு எப்போதும்போல பூஜை அறையை கூட்டி சுத்தம் செய்து கொள்ளுங்கள். சுவாமியின் திருவுருவப் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். முடிந்தவரை மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு வாசனை மிகுந்த பூக்களை போட்டுக் கொள்ள வேண்டும். தீபம் ஒன்றை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் என்ன தீபம் ஏற்றி வைத்தாலும் பரவாயில்லை. தீப ஒளிச்சுடர் உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒளிர வேண்டும்.

triangle

பூஜை அறையில் இருக்கும் தரையை ஈரத் துணி போட்டு துடைத்துக் கொள்ளவேண்டும். கொஞ்சமாக மஞ்சள் தூளை எடுத்து சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி குழைத்து, வலது கை மோதிர விரலால் அந்த மஞ்சளை தொட்டு பூஜை அறையில் சுத்தம் செய்த தரையின் மேல் மஞ்சளால் முக்கோணம் வரைந்து கொள்ள வேண்டும். அந்த முக்கோணத்திற்கு நடுவில் குங்குமத்தை கொண்டு வெற்றித் திலகம் இட வேண்டும்.

- Advertisement -

குங்குமத்தை லேசாக தண்ணீரில் குழைத்து வலது கை பெருவிரலால், அதாவது கட்டைவிரலால் குங்குமத்தை தொட்டு நெற்றியில் வீரத் திலகம், வெற்றி திலகம் இடுவது போல கீழிருந்து மேல் பக்கமாக தரையில் இருக்கும் மஞ்சள் நிற முக்கோணத்திற்கு உள்ளே வெற்றி திலகத்தை போட்டு விட வேண்டும்.

thilagam1

அடுத்தபடியாக ‘ஓம் தேவியே நமஹ! ஓம் மஹா சக்தியே நமஹ! ஓம் மகாலட்சுமியை நமஹ!’ இந்த மூன்று மந்திரங்களையும் தொடர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த மூன்று மந்திரங்களும் சேர்ந்தது ஒரு மந்திரமாக கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். உதிரி புஷ்பங்கள் கிடைத்தால் தரையில் வரைந்து வைத்திருக்கும் வெற்றி திலக கோளத்தின் மீது, பூக்களைப் போட்டு அர்ச்சனை செய்யலாம். பூக்கள் கிடைக்காதவர்கள் கண்களை மூடி மகாலக்ஷ்மியை மனதார நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தாலே போதும் வெற்றி உங்கள் வசமாகிவிடும்.

உங்களுடைய விடாமுயற்சியுடன், இந்த பரிகார பூஜையும் சேரும்போது அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வந்து நிற்கும். வெற்றி உங்களை தேடி வந்தாலே போதுமே, பின்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். காசு பணம் சுபிட்சம் தனம் தானியம் இவை அனைத்தும் நிறைந்த வீடாக உங்கள் வீடு மாறுவதற்கும் இந்த பரிகாரம் துணையாக நிற்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. முடிந்தவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையை செய்யலாம். முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் இந்த பூஜையை செய்து பலனடையலாம்.