- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றிகள் கிடைக்க அஷ்டமி பரிகாரம்

வெற்றிகள் கிடைக்க அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை பெற வேண்டும் என்பதற்காக முயற்சிகள் செய்வோம். அந்த முயற்சிகளில் வெற்றி அடைந்து விட்டோம் என்றால் அந்த ஒன்று நமக்கு கிடைத்துவிடும். தோல்வி அடைந்து விட்டோம் என்றால் அதை அப்படியே விட்டுவிடாமல் திரும்பத் திரும்ப முயற்சி செய்து அந்த செயலை செய்து முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் எண்ணிய எண்ணம் நமக்கு ஈடேறும். அந்த வகையில் எவ்வளவு தோல்விகளை கண்டிருந்தாலும் அந்த தோல்விகளிலிருந்து வெளியே வந்து வெற்றியை பெறுவதற்கு அஷ்டமி தினத்தில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வெற்றிகள் கிடைக்க அஷ்டமி பரிகாரம்

நமக்கு கஷ்டங்களை கொடுக்கக்கூடிய கிரகமாக திகழக்கூடியவர் சனீஸ்வர பகவான். நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் நமக்கு பலன்களை தரக்கூடியவர். அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானின் குருவாக தான் காலபைரவர் திகழ்கிறார். அதனால் நாம் கால பைரவரை வழிபாடு செய்தோம் என்றால் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும். சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும் பொழுது நம்முடைய கர்ம வினைகளும் குறைய ஆரம்பிக்கும். அதனால் தான் சனீஸ்வர பகவானின் ஆதிக்கத்தில் இருக்கக்கூடியவர்கள் காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி நாம் காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக திகழ்வதுதான் அஷ்டமி திதி. டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அஷ்டமி திதி என்பது இருக்கிறது. அன்றைய தினத்தில் மாலை 6:30 மணிக்குள் இந்த ஒரே ஒரு பொருளை நம்முடைய வீட்டில் வாங்கி வந்து வைத்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். அதே சமயம் சக்தி மிகுந்த நபராக மாறுவதோடு வெற்றிகளையும் அடைவோம் என்று கூறப்படுகிறது.

அந்த பொருள்தான் காலபைரவருக்கு உகந்த மிளகு. அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று நம்மால் இயன்ற அளவு மிளகை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மிளகை அப்படியே எடுத்துக் கொண்டு காலபைரவர் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சென்று காலபைரவரை முழுமனதோடு வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு அந்த மிளகை எடுத்து வந்து வைக்க வேண்டும். இந்த மிளகை நாம் எப்பொழுதும் சமையலுக்கு உபயோகப்படுத்துவது போல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அஷ்டமி தினத்தில் மிளகை வாங்கி வந்து வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு அதீத சக்தி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் உண்டாகும். தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு

எந்த ஒரு தெய்வத்தை வழிபடுவதாக இருந்தாலும் எந்த ஒரு தெய்வத்திற்கு பரிகாரம் செய்வதாக இருந்தாலும் முழு மனதுடன் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த தெய்வத்தின் அருளால் அந்த வழிபாட்டிற்கும் பரிகாரத்திற்கும் பலன்கள் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்