- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றிகளை தரும் ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

வெற்றிகளை தரும் ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

- Advertisement -

மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவது உண்டு. அப்படிப்பட்ட மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது மூல நட்சத்திரத்தில் வரும். மூல நட்சத்திரத்தில் மார்கழி மாதத்தில் அவதரித்தவர் தான் ஆஞ்சநேயர். வெற்றிகளை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் ஆஞ்சநேயர். ராம பக்தராகவும், காரியவெற்றியை தரக்கூடியவராகவும் திகழ்கிறார். அவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு கிரக தோஷம் என்பது முற்றிலும் நீங்கும். அதிலும் குறிப்பாக சனி பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை ஹனுமன் ஜெயந்தி என்று வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

ஆஞ்சநேயர் அவதரித்த நட்சத்திரமாக திகழ்வதுதான் மூல நட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூல நட்சத்திர நாள் அன்று ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் தான் அவர் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் மார்கழி மாதத்தில் வரக்கூடிய மூல நட்சத்திரத்தை நாம் ஹனுமன் ஜெயித்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் அனுமனை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வார்கள். கிரஹ தோஷங்கள் நீங்கும். வெற்றிகள் கிடைக்கும். தடைப்பட்ட செயல்கள் தடையின்றி நடைபெறும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி ராகு காலம், எமகண்டம் இந்த நேரங்களை தவிர்த்து மற்ற எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் ஆஞ்சநேயரின் படமோ, சிலையோ இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாம். ராமரின் படம் இருந்தால் கூட அதையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாம். அப்படி படமோ சிலையோ இல்லை என்பவர்கள் வெறும் தீபத்தை ஏற்றி வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். படமோ, சிலையோ இருப்பவர்கள் துளசி மாலை, வெற்றிலை மாலை போன்ற ஏதாவது ஒரு மாலையை சாற்ற வேண்டும்.

அவருக்கு மிகவும் பிடித்தமானது உளுந்த வடை. அதில் வெங்காயம் சேர்க்காமல் மிளகு, பெருங்காயத்தூள் மட்டும் சேர்த்து வைக்க வேண்டும். பிறகு அவருக்கு லட்டு என்பது மிகவும் பிடிக்கும் அதையும் வைக்கலாம். வெண்ணெய், அவல்பொரி கடலை போன்றவற்றையும் வைக்கலாம். இவற்றில் எதுவுமே வைக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் வெறும் வாழைப்பழத்தை வைத்துக் கூட ஆஞ்சநேயரை வழிபாடு செய்யலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான நாமம் ராம நாமம் அதனால் ஆஞ்சநேய ஜெயந்தி அன்று ஸ்ரீ ராமஜெயம் என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்தாலே ஆஞ்சநேயரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். முடிந்த அளவு அன்றைய தினம் முழுவதும் உங்கள் மனதிற்குள் ஸ்ரீராமஜெயம் என்று நாமத்தை கூறிக் கொண்டே இருக்கும் பொழுது ஆஞ்சநேயரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

ஆஞ்சநேயரின் படத்திற்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு ஆஞ்சநேயரின் மூல மந்திரம் தெரியும் பட்சத்தில் அந்த மூல மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். இயன்றவர்கள் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீராமஜெயம் என்று எழுதி மாலை தொடுத்து சாற்றி வழிபாடு செய்யலாம். வழிபாடுகள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை வீட்டில் இருப்பவர்களுக்கும் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களுக்கும் பிரசாதமாக தரலாம். இயன்றவர்கள் அன்றைய தினம் மற்றவர்களுக்கு அன்னதானம் அளிப்பது என்பது மிகவும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே:மார்கழி மாதத்தில் பணம் தரும் மந்திரம்
ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். ஆஞ்சநேயரை போல வீரமாகவும், தைரியமாகவும் செயல்பட முடியும் என்ற முழு நம்பிக்கையுடன் அவரை வழிபாடு செய்து அனைத்து விதமான பலன்களையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்