ஒருவருடைய வயதை அடையாளப்படுத்தும் பொருளாக தான் நம்முடைய தலைமுடி திகழ்கிறது. அன்றைய காலத்தில் தலையில் இருக்கக்கூடிய நரைமுடியை வைத்தே ஒருவரின் வயதை கணக்கிட்டு சொல்லிவிடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த நரைமுடி பிரச்சனை என்பது இருக்கிறது. இந்த நரைமுடி பிரச்சனையை தீர்ப்பதற்குரிய எளிமையான வழிமுறைகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இதை செஞ்ச போதும் உங்க நிறை முடி காணாம போயிடும்
ஒருவருடைய உடலில் பித்தத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் நரை முடி பிரச்சனை என்பது சிறுவயதிலேயே ஏற்பட்டுவிடும். இந்த பித்தத்தை தனித்து நரைமுடியை கருமையாக மாற்றுவதற்கு உதவக்கூடிய பொருளாக திகழ்வதுதான் கடுக்காய். நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த கடுக்காயின் விதை பகுதியை நாம் பயன்படுத்தக் கூடாது. தோல் பகுதியை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். கடுக்காயின் தோலை மட்டும் தனியாக எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
அதில் சிறிது எலுமிச்சம் பழம் சாறை பிழிந்து, அதனுடன் இந்துப்பையும் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளுங்கள். பிறகு இதை வெயிலில் உலர்த்தி விட வேண்டும். இந்த கடுக்காய் நன்றாக காய்ந்த பிறகு ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இளநரை பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் ஒரு கடுக்காய் தோலை மட்டும் எடுத்து வாயில் போட்டு சாப்பிட வேண்டும்.
இப்படி தினமும் செய்வதன் மூலம் முடி முளைக்கும் பொழுதே கருமையாக முளைக்க ஆரம்பிக்கும். உடம்பில் இருக்கும் பித்தமும் குறையும். 40 வயதிற்கு மேல் இருக்கும் நபர்களுக்கு வரக்கூடிய நரைமுடி பிரச்சினைக்கு இந்த கடுக்காய் பயன்படாது. இதை சாப்பிடுவதால் எந்த தவறும் இல்லை பித்தத்தின் அளவை குறைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் நரைமுடியை கருமையாக மாற்றாது.
அதற்கு பதிலாக இயற்கையிலேயே தயாரிக்க கூடிய ஹேர் டை பயன்படுத்தி முடியை கருமையாக்க முடியும். நாட்டு மருந்து கடைகளில் நில ஆவாரை பொடி கிடைக்கும். இந்த பொடியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மருதாணி பொடியும் கிடைக்கும். அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் நாம் இரவில் படுக்க செல்வதற்கு முன்பாக வடித்த சாதம் மீதம் இருக்கும் போது அதில் தண்ணீரை ஊற்றி வைப்போம் அல்லவா?
அந்த தண்ணீரை மறுநாள் காலையில் எடுத்து அதில் நில ஆவாரை பொடியையும் மருதாணி பொடியையும் சம அளவு சேர்த்து கலந்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு மையில்டான ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நரை முடி கருமையாகும். இயற்கையான முறைப்படி நம்முடைய தலைமுடியை நாம் கருமையாக்குவது தான் நல்லது.
கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துவதால் தோல் ஒவ்வாமை, புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. முடிந்த அளவிற்கு இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நம்முடைய நரை முடி பிரச்சனைக்கு நல்ல தீர்வை காண்போம்.
இதையும் படிக்கலாமே: முகப்பொலிவை தரும் சந்தனம்
கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வதற்கு பதிலாக இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நரை முடியை கருமையாக்கி ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.