வெற்றிலையை நடும்போது மண்ணுக்குள் இந்த 3 பொருட்களை போட்டு, இந்த திசையில் வைத்தால் போதும். வெற்றிலையோடு சேர்ந்து உங்கள் வீட்டு ஐஸ்வரியமும் செழிப்பாக வளர்ந்து கொண்டே செல்லும்.

vetrilai-mahalakshmi
- Advertisement -

இயற்கையாக மண்ணில் இருந்து வளரக்கூடிய, பசுமை நிறத்தோடு காட்சி அளிக்கக்கூடிய, செடி கொடிகள் எதுவுமே நமக்கு தீமை தரக்கூடிய விஷயம் அல்ல. ஆகவே, உங்களுடைய மனதில் வெற்றிலை கொடியை வீட்டில் வைத்து வளர்க்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் இருந்தால் அதை இன்றே சரி செய்து கொள்ளுங்கள். துளசி செடியை எப்படி வீட்டில் வைத்து வளர்க்கலாமா, அதே போல இந்த வெற்றிலை கொடியையும் வீட்டில் வைத்து வளர்க்கலாம். வெற்றிலையும் மகாலட்சுமிக்கு சொந்தமான ஒரு பொருள்தான். இந்த வெற்றிலை கொடியை வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்த்தால், ஐஸ்வர்யம் பெருகும். வெற்றிலை கொடியை நடுவதற்கு முன்பு அந்த மண்ணில் நாம் எந்தெந்த பொருட்களை போட்டு எப்படி நட வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே வெற்றிலைக் கொடி எல்லோர் வீட்டிலும் வளர்ந்து விடாது. ஒரு சில பேர் வீட்டில் வெற்றிலை கொடி பச்சை பச்சையாக தழைத்து வளரும். கொடி படரும். சில பேர் வீடுகளில் வெற்றிலை கொடியை வைத்த ஒரு சில நாட்களிலேயே உடனே பட்டுப்போகும். காரணம் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் இல்லாததுதான் காரணம். பாசிட்டிவ் எனர்ஜி எந்த இடத்தில் நிறைந்து இருக்கின்றதோ அந்த இடத்தில் செடி கொடிகள் எல்லாம் செழிப்பாக வளரும். உங்களுடைய வீட்டில் வைக்கக் கூடிய செடி கொடிகள் உடனடியாக பட்டுப் போகிறது என்றால் உங்களுடைய வீட்டில் கண் திருஷ்டியும் கெட்ட சக்தியும் நிறைந்திருக்கிறது என்பதை நமக்கு அந்த செடியின் மூலம் இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கின்றது. அந்த கெட்ட சக்தியை விரட்டி அடிப்பதற்கு வீட்டில் பூஜை பூனஸ்காரங்களும், வாசம் நிறைந்த தூபங்களும், செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

வெற்றிலை கொடியை வைக்க வேண்டிய திசை:
வெற்றிலை கொடி வளர்ப்பு பற்றி பார்க்கலாம். உங்களுடைய வீட்டின் ஈசானிய மூளை என்று சொல்லப்படும் வடக்கிழக்கு மூலையில் இந்த வெற்றிலை கொடியை வைப்பது மிக மிக சிறப்பு. வடக்கிழக்கு மூலையில் இடம் இருந்தால் பூமியிலேயே இந்த வெற்றிலை கொடியை பதியம் போடலாம்.

இடமில்லாதவர்கள் ஒரு சிறிய தொட்டியை ஈசானிய மூலையில் வைத்துவிட்டு, அந்த தொட்டியில் வெற்றிலை கொடியை வளர்க்கலாம். ஈசானிய மூலையில் செடி வைப்பதற்கு உங்களுடைய வீட்டில் வழியே இல்லை எனும் பட்சத்தில் வடக்கு, கிழக்கு, மேற்கு, இந்த மூன்று திசைகளில் ஏதாவது ஒரு திசையை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் இந்த வெற்றிலை கொடியை வளர்த்து வாருங்கள்.

- Advertisement -

வெற்றிலைக் கொடியை நடுவதற்கு முன்பு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு சின்னதாக குழி தோண்டி அதில் மூன்று 1 ரூபாய் நாணயங்கள், கொஞ்சமாக மஞ்சள், கொஞ்சமாக குங்குமம், 1 ஸ்பூன் அளவு காய்சாத பசும்பால் ஊற்றி, உங்களுடைய வெற்றிலை கொடி தழைத்து பட்டுப்போகாமல் வளர வேண்டும் என்று இறைவனை மனதார பிரார்த்தனை செய்து, மகாலட்சுமியை பிரார்த்தனை செய்து, வெற்றிலையை நட்டு அந்த குழிக்குள் உங்கள் கையாலேயே சிறிதளவு மண் எடுத்து மூன்று முறை போட்டு, அதன் பின்பு தண்ணீர் தெளித்து மண்ணை சமம் செய்து விட வேண்டும். (வெற்றிலைக் கொடி இருக்கக்கூடிய இடம் மட்டும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும்.)

இதையும் படிக்கலாமே: Happy new year 2023 wishes in Tamil | புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

இப்படி செய்தால் உங்களுடைய வீட்டில் வெற்றிலை செடி நன்றாக வளரும் நம்பி உங்களுடைய வீட்டிலும் வெற்றிலை செடியை வளர்க்கலாம்‌. (இயற்கையாகவே செடி கொடிகள் என்றால் வாடத்தான் செய்யும். அதில் இருக்கும் இலைகள் உதிரத்தான் செய்யும். அதற்காக யாரும் பயப்பட வேண்டாம்). வீட்டில் ஐஸ்வரியம் பெருக இது ஒரு சுலபமான முறை. நாளை புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. நாளைய தினம் உங்களுடைய வீட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக கூட இப்படி ஒரு செடியை உங்களுடைய வீட்டில் நட்டு வளர்க்கலாம். நல்லதே நடக்கும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -