மங்களகரமான பொருட்கள் என்று சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் நம்முடைய வீட்டில் என்றும் நிறைந்து இருந்தால் மகாலட்சுமி தாயாரின் அருளால் வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இதனால்தான் நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலத்திலேயே மளிகை சாமான் எழுதுவதாக இருந்தாலும் கூட முதலில் எடுத்தவுடன் மஞ்சள் என்று மங்களகரமான பொருளை தான் எழுதுவார்கள். அந்த வகையில் நம் வீட்டு பூஜைக்காக பல பொருட்களை பயன்படுத்தினாலும் மிகவும் இன்றியமையாத பொருளாக திகழ்வதுதான் வெற்றிலை பாக்கு. வெற்றிலை பாக்கு எந்த முறையில் வைத்தால் நமக்கு பணவரவு அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கக்கூடிய பொருட்கள் பல இருந்தாலும் அந்த பொருட்களை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் தான் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும். அதே சமயம் அந்த பொருட்களை நாம் வீணாக்காமல் உபயோகப்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் வெற்றிலை பாக்கு.
வெற்றிலை என்றாலே அது வெற்றிகளைத் தரும் என்றுதான் அர்த்தம். கோவில்களுக்கு அர்ச்சனை செய்வதற்காக சென்றாலும் வீட்டில் பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை தான் தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக வைப்போம். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் வெற்றிலை திகழ்கிறது. வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகவே கருதப்படுகிறது.
பலரும் வெற்றிலையை வைக்கும் முறை தெரியாமல் வைத்து அதனால் பல கஷ்டங்களையும் அனுபவித்து வருகிறார்கள். இதுவரை அவர்கள் செய்யும் தவறுகளையும் அப்படிப்பட்ட விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம். வெற்றிலையில் நுனியில் சரஸ்வதி தேவியும், மத்திய பகுதியில் பார்வதி தேவியும், காம்பு பகுதியில் மூத்த தேவியும் இருக்கிறதாக பொருள்படுகிறது.
அதனால் நாம் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களுக்கு வெற்றிலை பாக்கு வைக்கும் பொழுது அந்த காம்பை நீக்கிவிட்டு தான் வைக்க வேண்டும். மேலும் அதன் நுனிப்பகுதி வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தினமும் நம்முடைய வீட்டில் நாம் வழிபாடு செய்யும் பொழுது இரண்டு வெற்றிலை இரண்டு பாக்கு வைத்து வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும்.
அதே சமயம் அந்த வெற்றிலையை வாட விடாமல் அதை அன்று மாலையிலோ அல்லது இரவிலோ சாப்பிட்டு விட வேண்டும். அதை மீறி நாம் வெற்றிலையை வாட விட்டோம் என்றால் வீட்டில் தரித்திரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கடன் பிரச்சனையும் அதிகரிக்கும். மேலும் இந்த வெற்றிலையை பெண்கள் தங்களுடைய கணவனுக்கு மடித்து கொடுப்பதன் மூலம் இருவருக்கும் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்க ஆரம்பிக்கும்.
மேலும் இது செல்வ வளத்தையும் அதிகரிக்க கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அதனால் தான் இன்றைய காலத்திலும் மார்வாடிகள் தங்களுடைய உணவுப் பழக்கத்தில் மதிய உணவிற்கு பிறகு பீடா வெற்றிலை போன்றவற்றை போடும் பழக்கம் வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே ஆவணி மாதத்தில் பணவரவை அதிகரிக்கும் வார்த்தைகள்
இந்த எளிமையான வெற்றிலை பாக்கு வழிமுறையை நாமும் பின்பற்றி செல்வ வளத்தை அதிகரித்து மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வோம்.