வெற்றியைத் தரும் வெற்றிலை கொடியை எப்படி வளர்க்கக் கூடாது? இப்படி வளர்த்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

vetrilai-cash

வெற்றிலை கொடியை வீட்டில் வளர்க்க கூடாது என்று ஒரு சாரரும், வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டத்தை தரும் என்று இன்னொரு சாரரும் கூறுவதை கேட்டிருப்போம். உண்மையில் வெற்றிலையை கொடியை வீட்டில் வளர்ப்பது வெற்றி மேல் வெற்றியை தர கூடிய அற்புதமான பலன்கள் கிடைக்கும். மங்கலப் பொருட்களில் ஒன்றான வெற்றிலையை எப்படி வளர்க்க வேண்டும்? எப்படி வளர்க்க கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vetrilai-kodi

வெற்றிலையை முதல் முறையாக வளர்க்க விரும்புபவர்கள் நர்சரிகளில் வாங்கி வளர்க்கலாம் அல்லது வெற்றிலைக் கொடியின் கிளையில் இருந்து இரண்டு கணுக்களை மண்ணில் புதைக்கும் அளவிற்கு சேர்த்து வெட்டி எடுத்து வர வேண்டும். வெற்றிலைக் கொடி நன்கு செழித்து வளர! இரண்டு பங்கு தோட்ட மண், ஒரு பங்கு அளவிற்கு மணல், ஒரு பங்கு அளவிற்கு மாட்டு தொழு உரம், ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு, ஒரு டீஸ்பூன் சாம்பல் இவற்றை நன்கு கலந்து தொட்டியில் வளர்க்கலாம்.

வெற்றிலை கொடியை பொறுத்தவரை ஆன்மீக ரீதியாக ஆண் தன்மையுள்ள செடியாக பார்க்கப்படுவதால் தனியாக வளர்ப்பது நல்லதல்ல என்று கூறுவார்கள் அவ்வளவே. வெற்றிலைக் கொடியுடன் வேறு ஏதாவது ஒரு செடியை சேர்த்து தாராளமாக வளர்க்கலாம். பெரிய மரங்களின் அருகில் வளர்த்தால் நல்லது. வெற்றிலைக் கொடியை வளர்ப்பதற்கு திசைகள் எதுவும் கிடையாது. எந்த திசையில் வைத்தும் வளர்க்கலாம். வெற்றிலைக் கொடியை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு செல்வமானது மென்மேலும் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

vetrilai-kodi

வெற்றிலையில் அதிகம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்றால் அது பூஞ்சைத் தொற்று மற்றும் வேர் அழுகல் நோய் என கூறலாம். வெற்றிலையை பொறுத்தமட்டும் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது. தண்ணீர் கட்டாயம் தேங்கி நிற்கக்கூடாது. தொட்டியில் தண்ணீர் ஊற்றும் பொழுது ஈரப்பதம் இருந்தால் போதும், தேங்கி நிற்குமாறு எப்பொழுதும் ஊற்றாதீர்கள்! தண்ணீர் தேங்கி நின்றால் வேர் அழுகல் நோய் கட்டாயம் ஏற்படும்.

வெற்றிலை காய்ந்து போகிற மாதிரி உங்களுக்கு தெரிந்தால் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள வாழைப்பழ தோல் கொண்டு உரத்தை செய்து கொடுக்கலாம். காய்ந்த வாழைப்பழத் தோல்களை நன்கு மிக்ஸியில் அரைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு வேரை சுற்றிலும் போட்டு விடலாம். இலைகளில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அதற்கும் நீங்கள் அதிகம் தண்ணீர் ஊற்றுவது தான் காரணமாக இருக்கும் எனவே பூஞ்சை தொற்று ஏற்பட்டால் உடனே ஒரு கப் புளித்த மோருடன் சிறிதளவு பெருங்காயத்தூள், கொஞ்சம் மஞ்சள்தூள் கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து இலைகளிலும், மண்ணிலும் நன்கு தெளித்து விடுங்கள். இப்படி செய்யும் பொழுது பூஞ்சை தொற்றுகள் எளிதாக நீங்கும்.

vetrilai

வெற்றிலையில் மருத்துவ குணங்களும் ஏராளமாக அடங்கியுள்ளன. கைக்குழந்தைகளுக்கு ஒரு வெற்றிலையை நன்கு கசக்கி சாறெடுத்து துளசியுடன் சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை என்பதே ஏற்படாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாரம் ஒருமுறை வெற்றிலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் எடுத்துக் கொண்டு வந்தால் சளி, இருமல், மார்புசளி எதுவுமே தொற்றாது. வெள்ளிக்கிழமை தோறும் வெற்றிலையை விரித்து அதன் மேல் அகல் வைத்து தீபம் ஏற்றி வந்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.