இந்த வேர் உங்களிடம் இருந்தால் பணத்திற்கு பஞ்சமே வராது! கையில் தாராளமாக பணம் புழங்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

lakshmi-vettiver

பணத்தை ஈர்ப்பதற்கு பல்வேறு பொருட்கள் இருந்தாலும் அதில் பச்சை கற்பூரத்திற்கு தனி மதிப்பு உண்டு. அந்த வகையில் இந்த ஒரு வேர் நம்முடைய வீட்டில் இது போல் செய்து வைப்பதால் பணம் சரளமாகப் புழங்கும் என்கிற ரகசியமும் உண்டு. தேவையான நேரத்திற்கு பணம் கைக்கு கிடைக்க செய்யக் கூடிய அற்புதமான ஆற்றலும் இந்த வேருக்கு உண்டு. இந்த வேரை கையில் வைத்துக் கொண்டு உங்கள் குல தெய்வத்தை வேண்டினால் எங்கிருந்தாவது பணம் உங்கள் தேவைக்கு ஏற்ப வந்து சேரும். அது போல் வீட்டில் இந்த வேர் என்ன செய்யும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

vettiver

இந்த வேரை போட்டு தண்ணீர் குடித்தால் எண்ணற்ற நோய்கள் குணமாகும். நீர் கடுப்பு, காய்ச்சல், சோர்வு, தோல் நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தீரும். அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த இந்த வேர் தர்பை புல் வகையை சார்ந்தது. இதனை வெட்டி வேர் என்று கூறுவார்கள். வெட்டிவேரின் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஆன்மிக ரீதியாகவும் வெட்டிவேர் நிறைய விஷயங்களை செய்யும்.

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வெட்டிவேர் பணத்தை ஈர்க்கவும் செய்யும். ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரில் வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் வைத்து வெட்டிவேரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு முழு எலுமிச்சை பழத்தை போட்டுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து வரும் ஆற்றலானது, வீடு முழுவதும் பரவ செய்து லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

lakshmi-ganapathy

இதனால் வீட்டில் இருக்கும் தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறி விடும். வீட்டில் அடிக்கடி பிரச்சினை நடப்பவர்கள் இது போல் செய்து பார்க்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை அதில் எலுமிச்சை பழத்தை மட்டும் மாற்றி விட வேண்டும். தண்ணீரை வாரம் ஒரு முறை அல்லது தினமும் கூட மாற்றலாம். வெட்டி வேரை மட்டும் அப்படியே வைத்திருக்கலாம்.

- Advertisement -

கண் திருஷ்டிகள் நீங்கவும், நல்ல சக்திகள் நம் வீட்டிற்குள் வரவும், பணவரவு தடையின்றி நடைபெறவும் வெட்டிவேரில் எலுமிச்சை பழத்தை நன்கு சுற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வெள்ளை நூலை மஞ்சளில் தோய்த்து இறுக்கமாக நன்கு கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிப்பை வீட்டின் நில வாசல் படி அமைத்துள்ள இடத்தில் மேலே நடுவில் கட்டி வைக்க வேண்டும். 48 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக எலுமிச்சையை மாற்றி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது நல்ல அதிர்வலைகள் உண்டாகும். இதன் மூலம் பணம் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.

vetti-ver0

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களும் பணம் புழங்கும் அந்த இடங்களில் இது போல் செய்து வைத்தால் எந்த ஒரு கெட்ட திருஷ்டிகளும், கண் திருஷ்டிகளும் நீங்கி வருமானம் பல மடங்கு பெருகும். தொழில் விருத்தி அடையும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் வெட்டிவேரை எப்பொழுதும் இது போல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் பணம் சரளமாக உங்கள் கையில் புழங்க துவங்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க தேங்காயை ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் போதுமே! மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து பணம் கொழிக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.