வீட்டில் இந்த பொருட்களை இந்தக் கிழமையில் வாங்கிப் பாருங்கள் உங்கள் வீட்டிலும் குபேர வாசம் உண்டாகும்!

provision-jewel-kuberan
- Advertisement -

நாம் வாங்கும் பொருட்களும், அதனால் உண்டாகும் பலன்களும் சாஸ்திர ரீதியாக மாறுபடுகின்றன. மங்களகரமான பொருட்களை வாங்கும் பொழுது மங்களகரமான நிகழ்வுகள் நம் இல்லத்தில் நடைபெறுவது உண்டு. அந்த வகையில் வீட்டில் குறிப்பிட்ட இந்த பொருட்களை நீங்கள் இந்தக் கிழமையில் வாங்கும் பொழுது குபேரன் அருள் கிடைப்பதாக ஐதீகம் உண்டு. அது என்ன பொருள்? எந்த கிழமையில் வாங்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

thaniyam

வீட்டில் வறுமையைப் போக்கும் தானியங்களை வாங்கும் பொழுது நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமையில் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய கிழமையாக இருப்பதால் அந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் நம் வறுமையை நீக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. எனவே இப்போது மளிகைப் பொருட்களை வாங்குவோர் வெள்ளிக்கிழமையாக பார்த்து வாங்குவது சிறப்பு! அதிலும் குறிப்பாக வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் மளிகை பொருட்கள் வாங்குவது குபேர சம்பத்து பெருகச் செய்யும்.

- Advertisement -

மகாலட்சுமி வாசம் செய்யும் கல் உப்பு வீட்டில் அதிகம் பயன்படுத்த வேண்டும். அறிவியல் ரீதியாகவும் தூள் உப்பை விட, கல்லுப்பு ஆரோக்கியம் நிறைந்தது என்று கூறப்படுகிறது. எனவே இந்த கல் உப்பை வெள்ளிக்கிழமை வளர்பிறை சுக்கிர ஹோரையில் வாங்கி வைப்பது குபேரன் அருளைப் பெற்றுக் கொடுக்கும். மேலும் குபேரனுக்குப் பிடித்த ஊறுகாய் வெள்ளிக்கிழமை அல்லது வியாழன் கிழமை ஆகிய இரண்டு கிழமைகளில் நீங்கள் வாங்கலாம்.

oil-can1

சமையல் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என்று எந்த எண்ணெய் வாங்கினாலும் நீங்கள் புதன் கிழமையில் வாங்குவது நல்ல பலன்களைக் கொடுக்கும். இப்படி புதன் கிழமையில் எண்ணெய் வாங்கும் பொழுது சரியான சில்லறையை கொடுத்து வாங்க வேண்டும். பணத்தைக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை வாங்க கூடாது, அது நல்லதல்ல எனவே வாங்கும் போதே சரியான விலை கொடுத்து வாங்கி விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் தவிர மற்ற எந்த பொருட்களை நீங்கள் வாங்கினாலும் இது போல் சரியான சில்லறை கொடுத்து வாங்கக் கூடாது. பணம் நம் கையை விட்டு முழுவதுமாக செல்லக்கூடாது என்பதால் அதிக பணம் கொடுத்து மீதி சில்லரையை கையில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் செல்வம் துடைத்து போகாது என்று கூறுவார்கள். சாப்பிடும் உணவு பொருட்களையும் முழுவதுமாக வழித்து காலி செய்யக் கூடாது. இறுதியில் கொஞ்சமாவது விட்டு வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அப்போது தான் வறுமை இல்லாத வாழ்வு நிலைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

gold3

தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வாங்கும் பொழுது சுக்கிர ஓரையில் அல்லது குரு ஹோரையில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வாங்குவது சிறப்பு! தங்கம் மேலும் மேலும் வளர இந்த நாளில் குளிகை நேரத்தை பார்த்து வாங்கலாம். குளிகையில் வாங்கும் எந்த பொருளும் மேலும் மேலும் வளர்ச்சியடையும் என்பது ஐதீகம். எனவே குளிகை நேரத்தில் தினமும் வீட்டில் உங்கள் குழந்தைகளிடம் சில்லறையை கொடுத்து உண்டியலில் சேமித்து வர சொல்லுங்கள், நாளடைவில் அது பெருக துவங்கும்.

bero1

கட்டில், பீரோ, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற ஹோம் அப்ளையன்ஸ் வாங்கும் பொழுது குருவுக்கு உகந்த வியாழன் கிழமையில் வாங்குவது சிறப்பு! வீட்டிற்கு அலங்காரப் பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்கும் பொழுது சுக்கிர ஹோரையில் வாங்க வேண்டும். சுகபோக வாழ்க்கையை தரக்கூடிய சுக்கிர அருள் பெற சுக்கிர ஹோரையில் இப்பொருட்களை வாங்குவது மேலும் மேலும் நம்மை வளர்ச்சி அடைய செய்யும்.

mirror

கண்ணாடி பொருட்களையும், கண்ணாடி வாங்கும் பொழுதும் ஞாயிற்றுக் கிழமையில் வாங்க வேண்டும். பொதுவாக மங்கல பொருட்களை வாங்கும் பொழுது கையில் ரொக்கமாக வைத்துக் கொண்டு வாங்க வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி வாங்குவதை தவிர்த்து, ரொக்கமாக கொடுத்து வாங்கும் பொழுது தான் நமக்கு அதற்குரிய பலன்களும் கிடைக்கும். எப்போதும் வரவு, செலவு கணக்கை பெண்கள் கையாள வேண்டும். வரவு, செலவு கணக்குப் பார்த்து செலவு செய்யும் வீடுகளில் குபேர வாசம் உண்டாகும்.

- Advertisement -