எப்படிப்பட்டவர்களுக்கும் அரசாங்க வேலை நிச்சயம் கிடைக்கும். தினம்தோறும் பசுமாட்டிற்கு இந்த 1 பொருளை தானம் கொடுத்து வாருங்கள்.

pasu
- Advertisement -

இந்த காலத்தில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. அதிலும் குறிப்பாக அரசாங்க வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமாகி விட்டது. திறமை என்பதையும் தாண்டி, பல தடைகளை கடந்தால்தான் அரசாங்க வேலையை அடைய முடியும். ஜாதக கட்டத்தில் சூரிய பகவான், குரு பகவான், புதன் பகவான் சாதகமாக இருந்தால் சுலபமாக அரசாங்க வேலையை பெற்று விடலாம். சரி, ஜாதக கட்டத்தில் அரசாங்க வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அரசாங்க வேலை அடைந்தே தீர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆன்மீக ரீதியாக சில பரிகாரங்கள் நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஆண்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே அதாவது காலை 5.45 மணி அளவில் சுத்தபத்தமாக குளித்து தயாராகி இருக்க வேண்டும். அந்த நேரம்தான் கூடுமானவரை சூரிய உதயம் ஆவதற்கு முன் உள்ள நேரம் 6 மணிக்கு சூரியன் உதயமாகி விடும். சூரியன் உதயமாவதற்கு முன்பே நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். எப்படி என்றால் உங்களது கையில் வாழைப்பழம் வைத்துக் கொள்ளலாம். அல்லது மண்டை வெல்லம் வைத்துக்கொள்ளலாம் அல்லது பச்சரிசி இப்படியாக ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும்.

- Advertisement -

அந்தப் பொருள் பசுமாடு சாப்பிடும் பொருளாக இருக்க வேண்டும். இப்படியாக சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு நீங்கள் கையில் வைத்திருக்கும் அந்த பொருளை பசுமாட்டிற்கு கொண்டுபோய் தானமாக கொடுக்க வேண்டும். பசுமாட்டிற்கு சூரிய உதயத்திற்கு பின்பு கூட கொண்டுபோய் தானம் கொடுக்கலாம் தவறு கிடையாது. தினமும் இப்படி தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களது ஜாதககட்டம் பலவீனமாக இருந்தாலும் கூட உங்களுக்கு நிச்சயம் அரசாங்க வேலை கிடைக்கும். இந்த பரிகாரம் ஆண்களுக்கு.

pasu-komiyam

நீங்கள் பெண்களாக இருந்தால் உங்களுடைய வீட்டிலேயே ஒரு வாழை இலையை விரித்து அதன்மேல் கொஞ்சமாக கோதுமையை பரப்பி, இரண்டு அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். அந்த அகலில் நெய் ஊற்றி திரி போட்டு சூரிய பகவானையும் குலதெய்வத்தையும் வேண்டி நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு தொடர்ந்து இந்த தீபத்தை போட்டு வாருங்கள். வாரம் தோறும் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் 12 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். அந்தக் கோதுமையை பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம்.

- Advertisement -

மூன்றாவதாக நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி வாரம் தோறும் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் விநாயகர் சன்னிதானம் உள்ள கோவிலுக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு இரண்டு அகல் தீபம் நல்லெண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டுத் தீபம் ஏற்றி வரலாம். மேலே சொன்ன இரண்டு பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள்.

vinayagar-1

ஞாயிற்றுக்கிழமை அன்று பாலால் செய்யப்பட்ட நிவேதனம் ஒன்றை விநாயகருக்கு பிரசாதமாகப் படைத்து அதை அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு தானமாக கொடுத்து வாருங்கள். நிச்சயம் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரங்களை செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கு அரசாங்க வேலை கட்டாயம் உண்டு என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சோற்றுக் கற்றாழையை தவறியும் இப்படி மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள்! ஆபத்து நிச்சயம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -