வீட்டில் வரவே கூடாத 2 விஷயங்கள் என்ன? வீட்டை 5 வருடத்திற்கு ஒரு முறையாவது இதை செய்ய தவறினால் உங்க பிரச்சனை தீரவே தீராது தெரியுமா?

home-paint-karaiyan
- Advertisement -

வீட்டில் சில விஷயங்களை வைத்து அந்த வீட்டில் நன்மைகள் நடக்கப் போகிறதா? அல்லது கெடுதல் ஏதேனும் வருமா? என்பதை நாம் கூறி விட முடியும். அந்த வகையில் நம்முடைய வீட்டில் வரவே கூடாத இரண்டு விஷயங்கள் என்ன? இவை நம் வீட்டில் வருவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் வீட்டை என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற ஆன்மீக வாஸ்து தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நம்முடைய வீட்டை சுற்றிலும் களை செடிகள் இருந்தால் அதை முதலில் பிடுங்கி எறிந்து விட வேண்டும். வீட்டை சுற்றிலும் தேவையற்ற செடிகள், முட் செடிகள், கொடிகள் போன்றவற்றை வளர விடக்கூடாது. இது குடும்பத்தில் வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று எச்சரிக்கிறது வாஸ்து சாஸ்திரம். வீட்டிற்குள் புது பெயிண்ட் அடித்தாலும், நீங்கள் சுண்ணாம்பு, வெள்ளை அடித்து வைத்திருந்தாலும் கூட கரையான் புற்று கட்டுகிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது அர்த்தமாகும். கரையான் புற்றை நீங்கள் எப்படியாவது நீக்கி விட வேண்டும். இந்த கரையான் புற்று உங்கள் வீட்டில் படையெடுக்க ஆரம்பித்து விட்டால், உங்களுடைய செல்வமும் அரித்துவிடும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

- Advertisement -

கரையான் மட்டுமல்லாமல் வீட்டிற்குள் பூரான் வருவதும் வீட்டின் சுத்தமின்மையை குறிக்கிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் குப்பை, காடு போல வைத்திருந்தால் இது போல விஷ ஜந்துக்கள் வரத்தான் செய்யும். இந்த மாதிரியான விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைவது என்பது சாஸ்திர ரீதியாக துரதிஷ்டங்களைக் கொண்டு வரக்கூடியது என்று நம்பப்படுகிறது. மேலும் இது செல்வ செழிப்பை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

வீட்டின் மூளை, முடுக்குகளில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் உங்களுடைய பரண் மேல் இருக்கும் பொருட்களை இறக்கி அதை நன்கு சுத்தம் செய்து தூசுகள் உள்ளே புகாதவாறு மீண்டும் பாலித்தீன் கவர் அல்லது அட்டைப் பெட்டியில் நன்கு இறுக்கமாக கட்டி பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் வீட்டை எப்பொழுதும் நறுமணமாக வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு விதமான துர்வாடை வீசினால் அந்த வீட்டில் மகாலட்சுமி தங்கவே மாட்டாள். உங்களுடைய வருமானம் அதிகரிக்காது, பொருளாதார படிப்படியாக குறையும் எனவே வீட்டை எப்பொழுதும் நறுமணமாக வைத்திருங்கள். அதே போல வீட்டை ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் வெள்ளை அடித்து கொள்ள வேண்டும். முந்தைய காலங்களில் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் பண்டிகைக்கு வெள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் திருமண ஏற்பாடு செய்பவர்களுடைய இல்லத்திலும் வெள்ளை அடிப்பதை பார்த்திருப்போம்.

எனவே அதிகபட்சம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் சற்று சிரமம் பார்க்காமல், வீட்டிற்கு என ஒரு தொகையை ஒதுக்கி நீங்கள் பராமரிப்பு செய்ய வேண்டும். வீடு என்பதும் ஒரு வகையான காரகத்துவம் கொண்டது எனவே இந்த வீட்டை நீங்கள் சரிவர பராமரித்தால் மட்டுமே உங்களுடைய செல்வ செழிப்பானது வளர செய்யும். எனக்கென்ன எப்படியோ போகட்டும் என்று நேரமில்லை என்கிற ஒரு நொண்டி சாக்கை சொல்லி விட்டுக் கொண்டே இருந்தால் தரித்திரங்கள் தாண்டவம் ஆடும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. யாராவது ஒருவர் மாற்றி ஒருவருக்கு நோய்கள் வருவதற்கும், அதற்காக வீண் செலவுகள் செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -