குடும்பத்தில் நிம்மதியும், செல்வ செழிப்பையும் மென்மேலும் பெருகச் செய்யும் வேர்! அது என்ன வேர்?

vettiver-vinayagar
- Advertisement -

குடும்பத்தில் எப்பொழுதும் நிம்மதியும், செல்வ செழிப்பு, நல்ல ஆரோக்கியமும் இருந்தாலே போதும். இவற்றை அடைவதற்கு இறைவனை சரண் அடைகிறோம். தினந்தோறும் பூஜைகள் செய்வதும், விளக்கேற்றி பூஜை அறையில் வழிபடுவதும் இதற்காக தானே? செல்வம், நிம்மதி, ஆரோக்கியம் இம்மூன்றும் பெறுவதற்கு இந்த அற்புதமான வேர் எப்படி எல்லாம் செயல்படுகிறது? என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vettiver1

ஒவ்வொரு தாவரங்களுக்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் உண்டு. சில தாவரங்கள் விஷமாகவும், சில தாவரங்கள் ஆரோக்கியம் காக்கும் மூலிகையாகவும் நமக்கு இறைவன் கொடுத்துள்ளார். தாவரங்களின் வேர் முதல் விதை வரை அத்தனையுமே ஏதாவது ஒரு வகையில் நமக்கு பயன் தருபவையாக இருக்கின்ற செடிகளை எப்பொழுதும் வீட்டில் வளர்த்தால் மிகவும் நல்லது.

- Advertisement -

அந்த வகையில் உதாரணத்திற்கு வாழை மரத்தை எடுத்துக் கொள்ளலாம். வாழையில் அடி முதல் நுனி வரை அத்தனையும் ஒரு மனிதனுக்கு பயன்படக் கூடிய சிறப்பான தாவரமாகும். இது போல மனிதனுக்கு தன்னை முழுமையாக கொடுக்கக் கூடிய மரம், செடிகளை எப்பொழுதும் வீட்டில் வளர்த்தால் லக்ஷ்மி கடாட்சம் பெருகும். லக்ஷ்மி கடாக்ஷம் என்பது செல்வம் பெருகுவதற்கு மட்டுமல்ல, குடும்பத்தில் நிம்மதியும், ஆரோக்கியமும் இருந்தால் தான் அது லக்ஷ்மி கடாக்ஷம் ஆகும். அள்ள அள்ள குறையாத செல்வம் இருந்தும், தீர்க்க முடியாத நோய் இருந்தால் என்ன செய்வீர்கள்? இந்த கையில் சம்பாதித்து அந்தக் கையில் செலவு செய்து விடுவீர்கள்.

vetti-ver0

லட்சுமி கடாட்சம் என்பது இதுவல்ல. ஆரோக்கியம், மன நிம்மதி, செல்வம் ஆகிய மூன்றையும் பெருகக்கூடிய அமைப்பை பெற்றிருப்பவர்கள் தான் உண்மையில் லட்சுமி கடாட்சம் உடையவர்கள் ஆவார். ஒரு வீட்டில் இம்மூன்று அல்லது இம்மூன்றில் ஏதாவது ஒன்று குறைவாக இருந்தால் அவ்வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் தான் இந்த வேர் பரிகாரம். அந்த வேர் அனைவரும் அறிந்த வெட்டிவேர் தான். பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில், நாட்டு மருந்து கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய இந்த வெட்டிவேர் மாலையாகவும் விற்கப்படுகிறது. வீட்டில் உயிர்மூச்சாக கருதப்படும் தலை வாசலுக்கு வெட்டிவேர் மாலை சாற்றுவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

நீங்கள் வெள்ளிக் கிழமையில் பூஜை செய்யும் பொழுது கதவை திறந்து வைத்து தான் பூஜை செய்வீர்கள். அந்த கதவின் வழியே நுழையும் மகாலட்சுமிக்கு வெட்டிவேரு வாசம் மிகவும் பிடித்தமானதாக இருக்குமாம். குளிர்ச்சியை தரும் இந்த வெட்டிவேர் ஆன்மீகத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய சக்தி வாய்ந்த வேராக இருக்கிறது எனவே வெட்டிவேரை மாலையாக நிலைவாசல் அல்லது பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு சாற்றலாம் இதனால் வீடு முழுவதும் வாசனை நிரம்பி துர் தேவைகள் வீட்டை விட்டு வெளியேறும் மேலும் வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருகும்.

vettiver-malai1

வீட்டிலிருக்கும் துர்தேவதைகள் வெளியேறினால் மகாலட்சுமி நிரந்தரமாக குடி கொள்வாள். இதனால் நமக்கு ஆரோக்கிய பாதிப்புகள், தேவையற்ற மன உளைச்சல் மற்றும் வருமான தடைகள் அத்தனையும் நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் வெட்டிவேரை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்தும் பூஜை அறையில் வைக்கலாம். மருத்துவ ரீதியாகவும் பயன்படும் இந்த வெட்டிவேரை எப்பொழுதும் வீட்டில் வைத்திருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -