இந்த உலகத்தையே சுலபமாக வென்று, உள்ளங்கைகளில் அடக்கி விட முடியும். இந்த 1 எலுமிச்சை பழம் உங்கள் கையில் இருந்தால்!

எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடைந்து விட்டால்! தொட்டதெல்லாம் துலங்கி விட்டால்! நாம் செல்லும் இடமெல்லாம் நமக்கு வரவேற்பும் மரியாதையும் கிடைத்துவிட்டால்! நம்மை பார்ப்பவர்கள் அனைவரும் நம் வசம் ஆகிவிட்டால்! வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான செல்வச்செழிப்பு கிடைத்துவிட்டால்! இந்த உலகத்தையே வென்றதாக நமக்கு ஒரு எண்ணம் தோன்றி விடும் அல்லவா? வாழ்க்கையை ஜெயித்து விட்டோம் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். இந்த உலகத்தை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், முதலில் உங்களது வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்க வேண்டும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக முக்கியமான விஷயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது இந்த தந்திரத்தை செய்பவர்களுக்கு தோல்வியில்லை.

lemon1

பிறகு என்ன? நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். உங்கள் மனதிற்குள் இந்த உலகத்தையே வென்று விட்டதாக ஒரு எண்ணம் தோன்றி விடும். அந்த எண்ணமே வாழ்க்கையில் உங்களை உயர பறக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சரி, பரிகாரத்திற்கு செல்வோம். மறுநாள் நீங்கள் ஏதேனும் ஒரு முக்கியமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று இருந்தால், முந்தைய நாளே கடையிலிருந்து நல்ல எலுமிச்சம்பழத்தை தேர்ந்தெடுத்து உங்கள் கையாலேயே வாங்கிவந்து வீட்டில் வைக்க வேண்டும். ஒரே ஒரு எலுமிச்சம் பழம் போதும்.

முந்தைய நாள் இரவு, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை கொஞ்சம் ஊற்றி, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு, இந்த எலுமிச்சம் பழத்தையும் அதில் போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டி ஊதுபத்தி ஏற்றி, இந்த எலுமிச்சம்பழத்திற்கு காண்பித்து அதன் பின்பு இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து, உங்களது வலது உள்ளங் கைகளில் வைத்து மடித்துக்கொள்ளுங்கள்.

Amman

அதன் பின்பு நீங்கள் செல்லக்கூடிய காரியம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைத்து, ‘வசி வசி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு இந்த எலுமிச்சம்பழத்தை ஒரு பேப்பரில் அல்லது கவரில் போட்டு பத்திரமாக நீங்கள் வெளியே செல்லும் போது உங்களது பையிலோ அல்லது மணி பர்சில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

நிச்சயமாக நீங்கள் எந்த காரியத்திற்காக வெளியில் செல்கிறீர்களோ அந்த காரியம் உங்கள் வசமாகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. அந்த வேலை முடிந்த பின்பு மீண்டும் வீட்டிற்கு திரும்பியவுடன் இந்த எலுமிச்சம்பழத்தை பூஜை அறையில் வைத்து விட்டு, எலுமிச்சம்பழம் கொஞ்சம் காய்ந்து வந்ததும் அதை எடுத்து கால் படாத இடத்தில் தூரப் போட்டு விடலாம். தவறொன்றும் கிடையாது.

lemon

தேவக்கனி என்று சொல்லப்படும் இந்த எலுமிச்சம் பழத்திற்கு, எதையும் தன்வசப்படுத்திக் கொள்ளக்கூடிய, சக்தி அதிகமாகவே உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நல்லதை நினைத்து, நல்லதை நம் வசம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், அதன்படி நம்மை வழிநடத்திச் செல்லக் கூடிய சக்தியும் இந்த எலுமிச்சம் பழத்திற்கு உண்டு. இந்த தாந்த்ரீக பரிகாரம் மிக சுலபமானது அதேசமயம் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவிக்க நாளை(28/1/2021) ‘தை பௌர்ணமி’ அன்று இதை மட்டும் செய்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.