விபரீத ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா ? வாருங்கள் பார்ப்போம்

astrology

பரம்பரை பரம்பரையாக ஒருவர் ஏழ்மை நிலையில் இருந்தாலும் திடீரென்று ஒருநாள் பன்மடங்கு சம்பாதித்து கோடீஸ்வரராக மாறுவதை நாம் பார்த்திருப்போம். இதற்க்கு காரணம் அவர்கள் ஜகத்தில் உள்ள மிகப் பெரிய யோகமே. அந்த வகையில் விபரீத ராஜ யோகம் எப்படி ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

astrology-wheel

ஜாதகத்தை பொறுத்தவரை 12 ராசிகளில் நவகிரகங்கள் எப்படி அமர்ந்து எந்த வீட்டை பார்க்கிறது, எப்படி இணைந்திருக்கிறது என்பதை வைத்தே யோகங்களையும், தோசங்கங்களையும் கணிக்கமுடியும்.

விபரீத ராஜ யோகம் எப்படி ஏற்படும் ?
விபரீத ராஜயோகம் ஏற்பட சில விதிகள் உள்ளன. அந்த விதிகள் கீழே உள்ளன. விதியை தெளிவாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

money

 

- Advertisement -

விதி:
ஜாதகத்தில் 3, 6, 8, 12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானம் ஆகும். இதில் 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ அல்லது 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ அல்லது 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ அல்லது 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் அந்த ஜாதகருக்கும் பேரும் புகழும் கிடைப்பதோடு அவர் வாழ்வில் பண மழை பொழிந்து கோடீஸ்வரராக வாழ்வார். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும்.

money

உதாரணம்:
மேலே கூறியதை போல பாவ கிரகமான செவ்வாயை வைத்து ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

கன்னியா லக்கின ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், கன்னியா லக்கினத்திற்கு செவ்வாய் 3ம் வீட்டிற்கும் 8ம் வீட்டிற்கும் அதிபதி. ஆனால் அவர் கெட்டவர்.
கெட்டவரான செவ்வாய் 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் எதாவது ஒன்றில் இருந்தாலும் கெட்டுபோய்விடுகிறார் அல்லது மறைந்துபோய்விடுகிறார். இதன் காரணமாக அவர் தன்னுடைய தசா, புக்திக் காலத்தில் அந்த ஜாதகருக்கு கெடுதல் செய்வதற்கு பதிலாக நல்ல பலன்களை வாரி வழங்குவார்.

இதையும் படிக்கலாமே:
2018 ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு தொழில் எப்படி இருக்கும்.

இது போன்று ஜோதிடம் சம்மந்தமான மேலும் பல தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.