விடாப்படியான கறைகளை நீக்க துணிகளை ஊற வைக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் இந்த பொருளை சேர்த்தால் போதும். கை வலிக்க பிரஷ் போடாமலேயே காலரில் இருக்கும் அழுக்கு நீங்கும்.

dress
- Advertisement -

என்னதான் துணி துவைப்பதற்கு வாஷிங் மெஷின் இருந்தாலும், விடாப்படியான கறைகளை நீக்க அந்த துணிகளை சோப்பு தண்ணீரில் ஊறவைத்து, பிரஷ் போட்டு தான் வாஷிங்மெஷினில் போடுகின்றோம். இப்படி விடாப்பிடியான கறைகள் பிடித்திருக்கும் துணிகளை மிக மிக சுலபமான முறையில் பிரஷ் போடாமல் அழுக்குகளை நீக்குவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். எல்லா துணிக்கும் இந்த குறிப்பை பின்பற்ற முடியாது என்றாலும், குழந்தைகள் ஸ்கூலுக்கு தினமும் அணிந்து கொண்டு போகும் யூனிபார்ம், அழுக்கு படிந்த சட்டை இவைகளுக்கு மட்டும் இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம்.

உதாரணத்துக்கு மிகவும் அழுக்கு படிந்த ஐந்து துணி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான டப்பில் ஐந்து துணி மூழ்கும் அளவிற்கு மட்டும் வெதுவெதுப்பான சுடு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் துணி துவைக்கும் லிக்விட் அல்லது துணி துவைக்கும் பவுடரை போட்டு கரைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஷாம்பு கூட சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

இதில் நீங்கள் கூடுதலாக சேர்க்க வேண்டிய பொருள் பல் தேய்க்கும் பேஸ்ட். 1/2 ஸ்பூன் அளவு பல் தேய்க்கும் பேஸ்ட்டை இந்த தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து விட வேண்டும். பல் தேய்க்கும் பேஸ்ட் அவ்வளவு சுலபமாக தண்ணீரில் கரையாது. அது கட்டியாகவே நிற்காமல் நன்றாக கரைத்து விடுங்கள். இந்த தண்ணீரில் அழுக்கு படிந்த துணிகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து பிறகு அந்த துணிகளை நீங்கள் எடுத்துப் பார்த்தால், உங்களுக்கே தெரியும். அந்த காலரில் இருக்கக்கூடிய அழுக்கு எல்லாம் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். ஓரளவுக்கு லேசான கறைகள் எல்லாம் இந்த தண்ணீரில் ஊறும்போதே நமக்கு நீங்கிவிடும். மிகவும் விடாப்பிடியான காலரில் ஒட்டி இருக்கிறது என்றால் அந்த தண்ணீரிலேயே முக்கி இரண்டு கைகளைக் கொண்டு லேசாக கசக்கினாலே அந்த கறை சுத்தமாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு இதை நீங்கள் பிரஷ் போடாமல், சோப்பு போடாமல் அப்படியே வாஷிங் மிஷினில் போட்டு துவைத்து எடுத்துக் கொள்ளலாம். வேலை முடிந்தது.

- Advertisement -

ரொம்பவும் விடாப்பிடியான கறை பட்டுவிட்டது என்றால் அந்த இடத்தில் நேரடியாகவே பேஸ்ட்டை தடவி விட்டு லேசாக கசக்கி விட்டால், அந்த கறை சுலபமாக நீங்கிவிடும். சாதாரண துணிகளை தனியாக ஊற வைக்காமல் வாஷிங்மெஷினில் போடும்போது இப்படி செய்யலாம். கொஞ்சமாக பேஸ்ட் எடுத்து தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாஷிங்மெஷினில் துணியை போடும்போது லிக்விடோ அல்லது சோப்பு பவுடரை சேர்க்கும்போது கூடவே இந்த பேஸ்ட் கரைசலையும் ஊற்றி விட்டால் துணிகள் பளிச் பளிச் என துவைத்து நமக்கு கிடைத்துவிடும்.

நீங்கள் சேர்க்கக்கூடிய துணிகளின் அளவுக்கு ஏற்ப பேஸ்ட் அளவை கொஞ்சம் கூட்டிக் கொள்ள வேண்டும். எந்த பிராண்ட் வெள்ளை நிற டூத் பேஸ்ட்டை வேண்டும் என்றாலும் இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லா நேரங்களிலும் இதை பின்பற்ற முடியாது என்பவர்கள் மிக மிக அழுக்கான துணி நிறைய இருக்கிறது. சோம்பேறித்தனமாக இருக்கிறது அல்லது உடல்நிலை சரியில்லை. துணியையும் துவைக்க வேண்டும் என்ற வேலை இருக்கும் அல்லவா அப்போது கூட இந்த குறிப்பை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -