துணிமணிகளில் இருக்கும் எப்பேற்பட்ட பழைய கரையையும் சுலபமாக நீக்க வாஷிங்மெஷினில் இப்படி செய்யுங்கள்!

cloth-stain-mechine
- Advertisement -

கைகளால் கஷ்டப்பட்டு துவைப்பதை சுலபமாக்கி கொடுக்க பயன்படும் இந்த வாஷிங் மெஷின் சில சமயங்களில் கறையை ஏற்படுத்த காரணமாகவும் அமைந்து விடுகிறது. வாஷிங் மெஷின் வடிகால்கள் சரியாக இயங்காவிட்டால் அதில் மண் துகள்கள், சோப்பு துகள்கள் போன்றவை படிய ஆரம்பித்து விடும். இது நன்றாக இருக்கும் துணிமணிகளை கூட கறையை ஏற்படுத்தி விடும். அது போல சில ரசாயனங்கள் துணிமணிகளில் தெரியாமல் கொட்டி விட்டால் துணிமணிகளில் இருக்கும் நிறம் மங்கி வெள்ளையாக மாறிவிடும். இது ஆங்காங்கே அசிங்கமாக தெரிய ஆரம்பிக்கும். இது போல எப்பேற்பட்ட பழைய கறையையும் துணிமணிகளில் இருந்து நீங்குவதற்கு வாஷிங்மெஷினில் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கலர் கலராக இருக்கும் துணிமணிகளில் ரசாயனங்கள் படும் பொழுது அதன் நிறத்தை அது இழந்து மங்கி விடுகிறது. இது போல துணிமணிகளில் படிந்திருக்கும் எவ்வளவு பழைய கறைகளையும் ரொம்பவே சுலபமாக நீக்கிவிடலாம். எல்லா வகையான துணிமணிகளையும் ஒன்றாக வாஷிங்மெஷினில் போடுவதால் ஒன்றில் இருக்கும் கறை இன்னொரு துணியின் மீது படுவதும் உண்டு. இது நாட்பட்ட கரையாக இருக்கும் பொழுது இது போல செய்தால் சுலபமாக மாறிவிடும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் விடாப்பிடியான வெள்ளை துணிமணிகளில் இருக்கும் கடினமான கறைகளை அகற்றக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. காபி கொட்டுவது, டீ கொட்டுவது, பேனா இங்க் அல்லது குழம்பு வகைகள் ஏதாவது கொட்டி விட்டால் அதை உடனடியாக நீங்கள் சுத்தம் செய்து விட வேண்டும். அப்படியே விட்டுவிட்டால் நாளடைவில் அது விடாப்பிடியான கறையாக நூல் இழைகளுக்குள் சென்று தங்கி கொள்ளும். இதனால் நீண்ட நாட்கள் துணிமணிகள் சுத்தமாக வைத்திருக்க முடியாது.

இப்படியான விஷயங்களையும் இந்த குறிப்பை பயன்படுத்தினால் எளிதாக நீக்கி விடலாம். நாள்பட்ட கறைகளையும் அகற்றக் கூடிய ஆற்றல் வினிகருக்கு உண்டு எனவே நீங்கள் வாஷிங்மெஷினில் கறைபட்ட துணிமணிகளை போட்டு சுடு தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட்டு அதன் சூட்டிலேயே ஒரு மூடி வினிகர் கரைபட்ட இடத்தில் ஊற்றி தேய்க்க வேண்டும். கைகளால் துணிகளை கசக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்னர் நீங்கள் வாஷிங்மெஷினை இயக்கினால் நாள்பட்ட விடாப்பிடியான கறையும் ரொம்பவே எளிதாக நீங்கிவிடும். இதை ஒரு முறை செய்யும் பொழுது எல்லா கறையும் உடனடியாக நீங்காது. ஓரளவுக்கு கறை போனதும் மீண்டும் ஒருமுறை துவைக்கும் பொழுது இதே போல சுடு தண்ணீர் ஊற்றி வினிகரை தேய்த்து சுற்ற விடுங்கள். நான்கைந்து முறை இது போல் செய்யும் பொழுது கறை முற்றிலுமாக நீங்கிவிடும்.

எவ்வளவு விடாப்பிடியான கறைகளையும் ரொம்ப சுலபமாக நீக்கும் இந்த சுடு தண்ணீர் மற்றும் வினிகர் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். எப்பொழுதும் வீட்டில் வினிகர் பாட்டில் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது சமையலுக்கு மட்டும் அல்லாமல், இது போல கிளீனிங் செய்வதிலும் நிறையவே உதவிகளை செய்கிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் 30 ரூபாய்க்கு கிடைக்கக் கூடிய இந்த வினிகர் எவ்வளவு விடாப்பிடியான கறைகளையும் ரொம்பவே எளிதாக நீக்குவது கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -