விதர்பா அணி ராணி கோப்பை மூலம் வென்ற முழுப்பணத்தையும் புல்வாமா தாக்குதலில் பலியான கும்பங்களுக்கு அர்பணிக்கிறது – விதர்பா அணியின் கேப்டன்

Faiz
- Advertisement -

விதர்பா அணி இந்த ஆண்டு இந்தியாவிற்குள் நடந்த ரஞ்சி கோப்பியினை வென்று ரஞ்சி சாம்பியன்ஸ் பட்டம் பெற்றனர். பிறகு தற்போது பல மாநில அணிகளுக்கு இடையேயான ராணி கோப்பை நடந்து முடிந்துள்ளது. இதிலும் விதர்பா அணியே ராணி கோப்பை பட்டத்தை வென்றது.

vidarbha 1

விதர்பா அணி நேற்று விளாயாடும்போது கூட கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டே விளையாடினர். கடைசியில் இந்த தொடரில் விதர்பா அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் பாசல் இடம் வெற்றிக்கான காசோலை பரிசளிப்பு விழாவின்போது கொடுக்கப்பட்டது. அதை வாங்கி உடனே அவர் செய்த விடயம் நம்மை கலங்க வைத்தது.

- Advertisement -

பாசல் கூறியதாவது : நான் ஏற்கனவே எங்கள் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடி விட்டேன். இந்த வெற்றி பணத்தில் ஒரு பைசா கூட எங்களுக்கு வேண்டாம். இந்த தொகை முழுவதையும் புல்வாமா தாக்குதலில் பலியான நம்நாட்டின் உண்மையான வீரர்களின் குடும்பங்களுக்கு சென்று சேர வேண்டும் இதுவே எங்களின் பரிசு மற்றும் ஆசை என்று அனைவரையும் நெகிழ வைத்தார்.

vidarbha

வெற்றி பணத்தின் காசோலை 10 லட்சம் ருபாய் ராணுவத்தின் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்காக அந்த அணி வீரர்கள் மைதானத்தில் 2 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தி கண்கலங்க வைத்தனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் நான் கில்லி . ஆஸ்திரேலிய தொடரில் எனது சிறப்பான பவுலிங்கை நான் வெளிப்படுத்துவேன் – இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சபதம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -