பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் நான் கில்லி . ஆஸ்திரேலிய தொடரில் எனது சிறப்பான பவுலிங்கை நான் வெளிப்படுத்துவேன் – இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சபதம்

vijay

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

Vijay

இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர் கொண்ட இரண்டிலும் இந்திய அணியின் இளம் தமிழக ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கர் இடம்பிடித்துள்ளார். கடந்த நியூசிலாந்து தொடரில் இவர் இடம் பெற்றாலும் இவருக்கு பேட்டிங் செய்ய மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டார். இந்நிலையில் தனது பவுலிங் குறித்து பேட்டி ஒன்றினை அளித்தார் விஜய் ஷங்கர்.

அதில் விஜய் ஷங்கர் கூறியதாவது : கடந்த நியூசிலாந்து தொடரில் எனக்கு பேட்டிங் செய்ய மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. நிதாஸ் கோப்பையில் விக்கெட்டுகளை எடுக்கவேண்டும் என்று நினைத்து ரன்களை விட்டுக்கொடுத்தேன். ஆனால், நடக்க இருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் சரியான இடத்தில பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுக்க தீர்மானித்துள்ளேன்.

vijay

அதனால், இந்த தொடரில் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சில் எனது திறமையை நிரூபிப்பேன். உலகக்கோப்பை தொடருக்குமுன் இந்த தொடர் நடைபெறுவதால் இந்த தொடரில் நான் என்னை நிரூபிப்பது மிகவும் அவசியம் என்றும் விஜய் ஷங்கர் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய தொடருக்காக கெத்தாக ஹேர் ஸ்டைல் செய்து, புதிய கெட்டப்புக்கு மாறிய தல தோனி – வைரல் புகைப்படம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்