நீண்ட நாட்களுக்குப் பின் கங்கையில் சுதந்திரமாக விளையாடும் டால்பின்களின் வீடியோ காட்சி!

dolphins2

கொரானா வைரஸின் மூலம் பலவிதமான பாதிப்புகளை இந்த உலகம் சந்தித்து வந்தாலும், இயற்கையானது திரும்பவும், தன் பழைய நிலைக்கு செல்ல இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறது, என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகாது. அதாவது பேருந்துகள் ஓடாததால் காற்றில் மாசு ஏற்படுத்தப்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் கழிவுநீர் ஆற்றில் கலக்கப்படாததாலும், சுற்றுலா பயணிகள் இல்லாததாலும், கங்கை நதியானது இன்றுதான் உண்மையிலேயே புண்ணிய நதியாக மாறியுள்ளது. அதாவது, தூய்மை அடைந்துள்ளது. கங்கை குடிநீராக மாறியுள்ளதால், நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு ஆற்று டால்பின், அந்த நீரில் துள்ளி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகி வருகிறது. அதைப் பற்றி விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

dolphins

கங்கை நதியில் வாழும் டால்பின் ஒரு நன்னீர் டால்பின் என்று அழைக்கப்படும். ஆனால் பல வருடங்களாக கங்கை நதி நீரானது நன்னீர் என்ற தன்மையை இழந்து விட்டது. அதாவது மாசடைந்த நீராக கங்கைநதி மாறிவிட்டது. இதற்குக் காரணம் பல கழிவுகள் அந்த கங்கை நீரில் கலக்கப்பட்டது தான்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால், கங்கை நீர் மாசுபாடானது குறைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் பாயும் கங்கை ஆற்று பகுதியில் டால்பின்கள் காணப்பட்டது. பல வருடத்திற்கு பிறகு இந்த டால்பின்கள் இந்த நதியில் தங்களுடைய வாழ்வாதாரங்களை தேடி வருவதற்கு காரணம், கங்கை மாசில்லாத நீராக மாறி இருப்பதுதான் என்று அங்கு உள்ளவர்களால் சொல்லப்படுகிறது.

dolphins1

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த டால்பினானது அழிந்து வரும் ஒரு நீர் இனமாக தான் உள்ளது. கொரானாவினால் பல பாதிப்புக்கள் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும், பல மனிதர்களின் உயிரிழப்புக்கு இந்த வைரஸ் காரணமாக இருந்தாலும், உலகிற்கு இப்படி சில நல்ல இயற்கையான மாற்றங்களை கொடுக்க, இந்த ஊரடங்கு உத்தரவு ஒரு வகையில் உதவியாக உள்ளது என்பதை நினைத்து, மனதை தேத்திக் கொண்டால் தானே, மீதமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்? நீங்களும் இந்த வீடியோ காட்சியை கண்டுகளியுங்கள்!

இதோ அந்த வீடியோ பதிவு