தோனியை போன்று என்னாலும் இதை செய்து காட்ட முடியும் – விஜய் ஷங்கர்

shankar

ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் தமிழகத்தினை சேர்ந்த விஜய் ஷங்கர் மற்றும் கில் ஆகியோர் ஆஸ்திரேலிய சென்று அணியில் இணைந்தனர்.

vijay

இந்நிலையில் விஜய் ஷங்கர் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார் : நான் இந்திய அணிக்காக ஏற்கனவே 5 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். வங்கதேசத்திற்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் என்னால் பந்துகளை சரியாக கணிக்கமுடியாமல் சிரமப்பட்டேன். ஆனால்,தினேஷ் கார்த்திக் அந்த போட்டியினை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

அதேபோன்று இனி எப்பொழுதும் நிகழக்கூடாது என்று தீவிர பயிற்சி செய்தேன். அதன் விளைவாக சம்மேபத்தில் விளையாடிய அணைத்து போட்டிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளேன். மேலும், பந்துவீச்சில் 5 முதல் 6 ஓவர்கள் வரை வீசி முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறேன். எனவே, இப்போது என்மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது.

மேலும், தோனி எவ்வாறு பல ஆண்டுகளாக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து செல்கிறாரோ அதேபோன்று எந்நாளும் 5 அல்லது 6 வது இடத்தில களமிறங்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று போட்டியை வெற்றியுடன் முடிக்க முடியும் என்று கூறினார் விஜய் ஷங்கர்.

இதையும் படிக்கலாமே :

ஹார்டிக் பாண்டியாவை ட்விட்டரில் கலாய்த்த தோனி, தவான் மற்றும் கேதார் ஜாதவ்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்