இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட தமிழக வீரர்

vijay
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி இந்த போட்டியிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறினர்.

rohith

ரோஹித் 2 ரன்களிலும், தவான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பிறகு இறங்கிய கில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். பெரிதும் நம்பப்பட்ட தோனி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பிறகு ராயுடு மற்றும் மட்டுமே ஷங்கர் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.

- Advertisement -

தமிழக வீரரான விஜய் ஷங்கர் 64 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். ராயுடு மற்றும் ஷங்கர் ஜோடி இணைந்து 98 ரன்கள் குவித்தது. சரியான நேரத்தில் பொறுப்பினை உணர்ந்து ஆடிய விஜய் ஷங்கரை இந்திய ரசிகர்கள் வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.

shankar

முடிவில் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 252 ரன்களை குவித்தது. தற்போது நியூசிலாந்து அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

6,6,6 ஹாட்ரிக் சிக்ஸரை அடித்து நியூசி வீரரை அலறவிட்ட ஹார்டிக் பாண்டியா – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -