6,6,6 ஹாட்ரிக் சிக்ஸரை அடித்து நியூசி வீரரை அலறவிட்ட ஹார்டிக் பாண்டியா – வீடியோ

pandya
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி.இந்த போட்டியிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறினர்.

rohith

ரோஹித் 2 ரன்களிலும், தவான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பிறகு இறங்கிய கில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பிறகு ராயுடு மற்றும் விஜய் ஷங்கர் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.

- Advertisement -

பின்வரிசையில் களமிறங்கிய பாண்டியா அதிரடியாக விளையாடி 22 பந்தில் 45 ரன்கள் அடித்தார். மொத்தமாக 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்த அவர் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை தொடர்ந்து அடித்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

- Advertisement -

இறுதியில் இந்திய அணி 252 ரன்களை அடித்தது. இதனால், 253 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி தங்களது ஆட்டத்தை விளையாடி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

நம்பமுடியாத வகையில் போல்டாகி வெளியேறிய தோனி – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -