2012ஆம் ஆண்டு இவரை சந்தித்த பின்பு தான் நான் ஒரு பினிஷர் என்பதை உணர்ந்தேன். ஆஸ்திரேலிய தொடரில் அவர் சொன்னதை நிச்சயம் செய்வேன் – இந்திய அணியின் ஆல்ரவுண்டர்

vijay
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

indian-team

இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர் கொண்ட இரண்டிலும் இந்திய அணியின் தமிழக ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கர் தேர்வாகியுள்ளார். இந்த தொடருக்கு முன்பாக தனது ஆட்டம் குறித்து அவர் பேட்டி ஒன்றினை அளித்தார்.

- Advertisement -

அதில் விஜய் ஷங்கர் கூறியதாவது : நான் கடந்த 2012ஆம் ஆண்டு எனது 21 வயதில் முறையாக தமிழ்நாடு அணியில் தேர்வாகி ஆடிவந்தேன். அப்போது தமிழக அணி விளையாடிய ஒரு போட்டியை காண வந்து இருந்தார் இந்திய அணியின் வீரரான ராகுல் டிராவிட்.

vijay

அப்போது அவர் என்னை பார்த்து உன்னுடைய ஆட்டம் நன்றாக இருக்கிறது. நீ ஒரு பினிஷர் இந்திய விளையாடுவதை அப்போதும் நீ இதைப்போன்று இந்திய அணியை அழைத்து செல்லும் ஒரு பினிஷராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை நான் இப்போது இந்திய அணிக்காக செய்ய வேண்டும் என்று நினைக்கிறன். அவரின் ஆலோசனை என்னை சிறப்பாக விளையாட வைக்கிறது என்று தெரிவித்தார் விஜய் ஷங்கர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

புல்வாமா தாக்குதல் : பெரிய அளவில் நிதியுதவி அளிக்க உள்ள ஷிகார் தவான். ப்ளீஸ் நீங்களும் தரலாமே மனிதாபிமான வேண்டுகோள் விடுத்த தவான் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -