இந்த போட்டியில் என்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன் – விஜய் ஷங்கர்

Vijay
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி அதன்படி விளையாடி இந்திய அணி 250 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 116 ரன்களும், விஜய் ஷங்கர் 46 ரன்களும் குவித்தனர்.

Toss

அடுத்தது ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்களை குவித்தது. அதற்கடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

வெற்றி குறித்து பேசிய விஜய் ஷங்கர் : இந்த போட்டியில் எனது செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்தது. நான் கடைசி ஓவரை பவுலிங் செய்ய வந்தபோது எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது. இந்த ஓவரில் எனது திறமையை நிரூபித்தால் தான் அணி வீரர்கள் என்னை முழுமையாக நம்புவார்கள் என்று நினைத்து என்னால் செய்ய முடியும் என்று அந்த ஓவரை வீச தயாராகினேன். போட்டியை வெற்றிகரமாக முடித்தபோது பேட்டிங் செய்ததை விட சந்தோஷ பட்டேன்.

vijay

எனக்கும் கோலிக்கும் இடையேயான பாட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. நான் பேட்டிங் செய்தபோது நன்றாக பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அடைந்தேன் என்றும் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இவரைப்போன்ற ஒரு வீரர் எங்கள் அணியில் இருந்தால் நாங்கள் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிபெறுவோம். தோல்வி குறித்து – பின்ச் பேட்டி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -