முதல் ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறிய ஹிட்மேன் ரோஹித் – வைரல் வீடியோ

Rohith

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. துவக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் களமிறங்கினர்.

Toss

இந்த போட்டியில் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் ரன் ஏதும் எடுக்காதநிலையில் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஜாம்பாவிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய மண்ணில் இதுவே தொடக்க வீரராக அவரது முதல் டக் அவுட் ஆகும். அவர் அடித்த இந்த ஷாட் முதல் ஓவரில் அடிக்கவேண்டிய ஷாட் இல்லை என்று பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

முதல் பவர்பிளே ஓவர்களில் இரண்டு பீல்டர்கள் மட்டுமே வெளியில் நிற்பார்கள் அந்த நேரத்தில் பீல்டரின் கைக்கே கேட்ச் சென்றது. இதோ அந்த வீடியோ :

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கோலி 116 ரன்களும், விஜய் சங்கர் 46 ரன்களும் அடித்தனர். ஆகையால், 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆட ஆஸ்திரேலியா அணி தயாராகி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

தனது 40ஆவது சதத்தினை அடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் – கிங் கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்