இன்று 25-3-2025 பங்குனி மாதத்தில் செவ்வாய் கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் தேய்பிறை ஏகாதசி திதி. இதை விஜயா ஏகாதேசி என்று சொல்கிறார்கள். இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு விஜயம் கிடைக்கும். அதாவது ஜெயம் கிடைக்கும். வேண்டுதலில் வெற்றி கிடைக்கும். ராமாயணம் காலகட்டத்தில், ராவணனை எதிர்த்து ராமர் போர் செய்தபோது, ராமருக்கே தாங்க முடியாத நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது.
போரில் ஜெயிக்க முடியாத சூழ்நிலை வந்த போது, ராமர் துவண்டு அமர்ந்த போது, அவருக்கு ஊக்கமளித்து வெற்றியை கொடுத்த ஏகாதசி தான் இந்த பங்குனி மாதத்தில் வந்திருக்கும் விஜயா ஏகாதசி. ராமருக்கு பிரச்சனை வந்த போது இந்த விஜயா ஏகாதசி அன்றுதான் பெருமாளை நினைத்து விரதம் இருந்து, வழிபாட்டை மேற்கொண்டார்.
பிறகு ராமருக்கு போரில் வெற்றியும் கிடைத்தது. இன்று வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் போராடிக் கொண்டிருக்கும் நீங்களும், வெற்றிகான வேணுமா. கவலையே படாதீங்க. பெருமாளை நினைத்து, பெருமாள் முன்பு இந்த ஒரு பாடலை படியுங்கள். நிச்சயம் வாழ்க்கை என்னும் போரில் நீங்கள் ஜெயிப்பீர்கள்.
உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு இன்று மாலை சென்று துளசி இலைகளை வாங்கி கொடுத்து, வழிபாட்டை மேற்கொண்டு, கோவிலில் அமர்ந்தும் இந்த நான்கு வரி பாடலை படிக்கலாம். வீட்டில் பெருமாளுக்கு துளசி இலைகளை சாத்தி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வீட்டில் அமர்ந்தும் இந்த பாடலை படிக்கலாம்.
ஜெயம் கிடைக்க பாடல் வரிகள்
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்,
சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்,
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு இப்படி பஞ்சபூதங்களின் அடக்கம் பெருமாள். அந்த சிவனுடைய ஸ்வரூபமும் பெருமாள். சங்கு சக்கரத்தை கையில் ஏந்தி கொண்டு நம்மை காப்பவரும் பெருமாள், வான் உலகில் இருப்பவர்களையும், பூலோகத்தில் இருப்பவர்களையும் காத்து ரட்சிக்கும் பெருமாளே என்னையும் காத்து ரட்சிக்க வேண்டும் என்று வேண்டி பாடக்கூடிய பாடல் வரிகள் தான் இவை.
இதையும் படிக்கலாமே: ஏழேழு ஜென்ம சாபம் நீங்க
எளிமையான இந்த தமிழ் பாடல் வரிகளை இன்றைய தினம் பெருமாள் முன்பு படித்து எவர் ஒருவர் வேண்டுதலை வைக்கிறீர்களோ, அந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.