- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஏழேழு ஜென்ம சாபம் நீங்க

ஏழேழு ஜென்ம சாபம் நீங்க

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த முயற்சியால் எந்த பலனும் ஏற்படவில்லை, எந்தவித முன்னேற்றமும் உண்டாகவில்லை, சுப காரியங்களில் தடைகள் இருக்கிறது, எதைத் தொட்டாலும் தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள், இப்படி இருப்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவம்தான் காரணமாக திகழும். அதோடு மட்டுமல்லாமல் ஏழேழு ஜென்மமாக வரக்கூடிய சாபமும் அவர்களை பின்தொடர்ந்து வருவதால் இந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இவை அனைத்தையும் நீக்கி வெற்றிக்கு மேல் வெற்றி கிடைப்பதற்கு குலதெய்வ ஆலயத்திற்கு வாங்கி தர வேண்டிய பொருட்களைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஏழேழு ஜென்ம சாபம் நீங்க

குலதெய்வம் என்பது நம்மை காக்கக்கூடிய தெய்வம். நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காக்கக்கூடிய முதல் தெய்வமாக திகழ்வது நம்முடைய குலதெய்வம் தான். எத்தனை தெய்வங்களை வணங்கினாலும் நமக்கு பிரச்சனை என்றதும் ஓடோடி வரக்கூடிய முதல் தெய்வம் குலதெய்வமே. குலதெய்வத்தின் அருள் இருந்தாலே நமக்கு பலவிதமான பிரச்சனைகள் வராமல் இருக்கும். அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கும் அதே சமயம் நம்முடைய சாபமும் பாவமும் நீங்குவதற்கும் செய்ய வேண்டிய ஒரு வழிமுறையை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

குலதெய்வ வழிபாட்டை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். இயன்றவர்கள் மாதத்தில் இரண்டு முறை கூட சென்று வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்வதோடு நம்முடைய பாவமும் சாபமும் நீங்குவதற்கு ஒரே ஒருமுறை மட்டும் இந்த பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும். அந்த பொருட்கள் தான் குலதெய்வ கோவிலுக்கு உபயோகப்படக்கூடிய மணி, உண்டியல், மற்றும் விளக்கு.

இதில் உண்டியலை நாம் வாங்கித் தரும் பொழுது கோவிலில் எந்த அளவிற்கு வேண்டும் என்பதை கேட்டு வாங்கி தர வேண்டும். மணி மற்றும் விளக்கை வாங்கி வந்து ஒரு வாரம் வரை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து, பிறகு அதை ஆலயத்திற்கு கொண்டு போய் தானமாக தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய சாபமும் தோஷமும் நீங்கும். இவை நீங்கி விட்டாலே நம்முடைய வாழ்வில் பலவிதமான நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:செல்வ வளத்தை அதிகரிக்கும் அங்காரக ஏகாதசி

நம்முடைய வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டும் இந்த பொருட்களின் ஏதாவது ஒன்றை முழுமனதோடு குலதெய்வ கோவிலுக்கு வாங்கி தருவதன் மூலம் நம்முடைய முன் ஜென்ம பாவமும் ஏழேழு ஜென்ம சாபமும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்