விஜயதசமி தின வழிபாடு

“விஜயம்” எனப்படும் “வெற்றி” கொடுக்கும் நாளாக “விஜயதசமி” தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள தீமையான எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தையும் நீக்கி, நல்வழியில் நடந்து தெய்வங்களின் ஆசிகளை பெறுவதற்கான ஒரு சுப நாளாக இருக்கிறது. இந்த விஜயதசமி தினத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை அறியலாம்.

புராண இதிகாசங்களின் படி “மகிஷன்” எனும் அசுரன் தனக்கு எப்பேர்ப்பட்ட ஆயுதங்கள், தேவர்கள், மனிதர்கள் போன்றோர்களாலும் மரணம் ஏற்படக்கூடாது என பிரம்மாவிடம் வரம் கேட்ட போது பிரம்ம தேவர் அதை மறுக்க, மனித இனத்தில் மென்மையான குணம், பலம் கொண்ட பெண்ணை சுலபமாக வென்றுவிடலாம் என கருதி பெண்ணால் மட்டும் தனக்கு மரணம் உண்டாகலாம் என்கிற வரத்தை பெற்றான்.

மகிஷனின் அதர்ம மீறல்கள் எல்லை மீறி சென்ற போது, மூன்று தேவியர்களும் ஒன்றாக இணைந்த மகிஷாசுரமத்தினியாக அவதாரம் எடுத்து மகிஷனை வதம் செய்து அகிலத்தை அதர்மத்தின் பிடியிலிருந்து மீட்டாள். தீமையின் உருவமாக இருந்து எங்கும் இருள் நிறைந்திருந்த உலகத்திற்கு ஒளியை தேவி தந்த தினமாக விஜயதசமி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்த போது தங்களின் ஆயுதங்களை எல்லாம் ஒரு வன்னி மரத்தின் பொந்திற்குள் வைத்து, குருஷேத்திர யுத்தத்திற்கு முன்பு விஜயதசமி விரதம் கடைபிடித்து, துர்க்கா தேவியை வழிபட்டு, அவர்கள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சிவபெருமானின் ஆற்றல் கொண்ட வன்னி மரத்தை 21 சுற்றுகள் சுற்றி வந்து, அந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சென்று சண்டையிட்டு போரில் வெற்றி பெற்றனர்.

- Advertisement -

எனவே இந்த விஜயதசமி நன்னாளில் விரதம் இருந்து அருகில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, சிவனையும் அம்பாளையும் வழிபட்ட பின்பு, வன்னி மரத்தை 21 சுற்றுகள் சுற்றி வந்து வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொடங்கிய செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் குவியும்.

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vijayadasami pooja procedure in Tamil and Vijayadasami pooja benefits in Tamil. It is also called as Vijayadasami poojai valipadu in Tamil.  Ayudha pooja, vijaya dashami pooja details in Tamil are here.