- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிஜயதசமி அன்று வீடுகளில் பெண்கள் கட்டாயம் செய்யவேண்டிய ஒரு பூஜை. இதனை தவறாமல் செய்திடுங்கள். வளமான...

விஜயதசமி அன்று வீடுகளில் பெண்கள் கட்டாயம் செய்யவேண்டிய ஒரு பூஜை. இதனை தவறாமல் செய்திடுங்கள். வளமான வாழ்வைப் பெற்றிடுங்கள்

- Advertisement -

விஜயதசமி அன்று எந்த ஒரு விஷயத்தையும் முதல் முறை துவங்குவதாக இருந்தால் நாம் துவங்கக் கூடிய அந்த செயலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றது. அவ்வாறு நாம் தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது நமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பது ஐதீகம். எனவே தான் குழந்தைகளையும் விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்து விடுகிறோம். அன்றைய தினம் படிப்பை துவங்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவ்வாறு இன்றைய தினத்தில் விசேஷ பூஜை செய்வதன் மூலம் வளமான வாழ்வை பெற்று மன நிம்மதியுடன் வாழ முடியும். வாருங்கள் இந்த பூஜையை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

vijaya-lakshmi

திதிகளில் பலவித திதிகள் இருக்கின்றன. அவ்வாறு அஷ்டமி, நவமி, தசமி ஆகிய மூன்று திதிகளும் நாம் அறிந்ததே. அஷ்டமி தினத்தன்று புதியதாக ஆயுதம் வாங்குதல், அரன் அமைத்தல், தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை செய்யத் துவங்கலாம். இன்றைய தினம் தான் பராசக்தி ஆயுதம் தரித்த தினமாகவும் இருக்கிறது. இந்த தினத்தில் பராசக்தி தேவிக்கு பூஜைகள் செய்து வழிபடுவதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும். வளர்பிறை அஷ்டமி தேய்பிறை அஷ்டமியன்று வராகி அம்மனுக்கு பரிகார பூஜைகள் செய்வது மிகுந்த பலனைத் தருகிறது.

- Advertisement -

அவ்வாறு புவனேஸ்வரி தாயார் நவமி தினத்தன்று தான் மகிஷாசுரனை வதம் செய்ததாக கூறப்படுகிறது. பத்தாவது நாள் வரக்கூடிய திதி தான் தசமி திதி எனப்படுகிறது. இன்றைய நாள் தர்மராஜாவிற்கு உரிய நாளாகும். அன்றைய தினம் ஆன்மீக பூஜைகள் செய்வது பரிகாரங்கள் செய்வது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எனவே இன்றைய தினம் கல்வி மற்றும் கலைகளை துவங்குவதற்கு ஏற்ற தினமாகும். இன்றைய தினத்தில் துவங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது நமக்கு வெற்றியைத் தேடித் தரும்.

buvaneshwari

பொன் பொருள் சேர்வதற்கு விஜயதசமியன்று நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரம். சிறிதளவு வேப்பிலையை பறித்து கொண்டு அதை நன்றாக கழுவி காயவைத்துக் கொள்ள வேண்டும். வேப்பிலை அம்பிகைக்கு உரிய ஒரு பொருளாகும். சிவனின் அருள்பெற்ற இந்த வேப்பிலையை வைத்து இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அம்பிகையின் முழு அருளைப் பெறமுடியும்.

- Advertisement -

ஒரு மஞ்சள் நிற துணியில் இந்த வேப்பிலையை வைத்துக் கொண்டு அதனுடன் நூற்றி ஓரு ரூபாய் பணத்தையும் வைத்து அதனுடன் சிறிய அளவு தங்கத்தையும் சேர்த்து ஒன்றாக கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும். விஜயதசமியன்று எப்படி பூஜை செய்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் அலங்காரம் செய்து தீப தூபம் காண்பித்து இந்த மஞ்சள் நிற முடிச்சிர்க்கும் தீபம் காண்பித்து உங்கள் மனதினை ஒருமுகப்படுத்தி வேண்டிக் கொள்ள வேண்டும்.

yellow-handkerchief

இன்றிலிருந்து மூன்று மாதத்திற்குள் எனது கடன்கள் எல்லாம் அடைந்து அடகில் இருக்கும் நகைகள் மீண்டு வரவேண்டும். வருமானம் பெருக வேண்டும். தொழில் சிறப்புடன் நடைபெற வேண்டும் என உங்களின் வேண்டுதலை வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு மூன்று மாதங்கள் கழித்து தை மாதத்தில் இந்த முடிச்சை அவிழ்த்து நூற்றி ஓரு ரூபாயை உங்கள் கடனை அடைப்பதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் வேப்பிலையை தூபம் காண்பிக்கும் பொழுது அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும். மஞ்சள் நிறத் துணியை கால் படாத இடத்தில் போட வேண்டும்.

சற்று முன்