விகாரி ஆண்டில் செய்யும் வேலைகளில் சிறப்பான பலன்களை பெற போகும் ராசியினர் யார்?

12-rasi

அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் வருடங்கள் கணக்கின் படி 33 ஆவது ஆண்டாக விகாரி ஆண்டு பிறந்திருக்கிறது. இந்த புதிய தமிழ் ஆண்டில் அனைத்து ராசியினரும் தங்களுக்கு எத்தகைய பலன்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு செய்யும் வேலைகள் அல்லது பணிகளில் அதிகளவில் நன்மைகளை பெறப் போகும் ராசியினர் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடகம்:
Kadagam Rasi

கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நன்மை பயப்பதாக அமையும். ஏற்கனவே இருந்த பணிகளில் இருந்து விலகி அதிக ஊதியம் உள்ள பணிகளில் சேரும் வாய்ப்பு ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் போன்றவை ஏற்படும். உங்களுக்கு கீழே இருக்கும் தொழிலாளர்களின் திறமையான செயல்பாடுகளால் உங்களுக்கு புகழும், அதிக லாபமும் கிடைக்கும். வேலைகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். வேலை சம்பந்தமாக தொலை தூரப் பயணங்கள் செல்லும் நிலையும், அதனால் அனுகூலங்களும் உங்களுக்கு உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசியினருக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஆண்டாகவே இருக்கிறது. பணியிடங்களில் உங்களுக்கு சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீரும். பெரிய தொழிலதிபர்கள், வியாபாரிகள் போன்றவர்களின் நட்பைப் கிடைத்து, அதன் காரணமாக பொருளாதார ரீதியான அனுகூலங்கள் உங்களுக்கு ஏற்படும். உங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்களாலும், உயர் அதிகாரிகளாலும் பாராட்டப்படும் சூழல் ஏற்படும். செய்யும் வேலைக்கு அப்பாற்பட்ட வழியிலும் திடீர் தன வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். சக பெண் ஊழியர்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

- Advertisement -

மகர ராசியினருக்கு இந்த விகாரி ஆண்டு அனைத்திலும் உச்சத்தை தொடும் வகையில் இருக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் உங்களுக்கு கிடைக்கும். செய்யும் வேலைகளில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும், கவனத்தையும் பெறுவீர்கள். ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தொழிலாளர்கள் பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். இதனால் உற்சாகமாக செயல்பட்டு மிகுந்த லாபங்களை பெறுவீர்கள். சிறப்பாக பணிபுரிந்த அதற்காக ஒரு சிலர் ஊக்கத்தொகை பரிசு பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான விகாரி ஆண்டின் பொது பலன்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vikari year job in Tamil. It is also called as Jothidam rasi in Tamil or 12 rasi jothidam in Tamil or Vikari aandu in Tamil or Vikari varudam in Tamil.