விளக்கு ஏற்றும் எண்ணெய் பலன்கள்

kamatchi-vilakku3

நம் வீட்டுப் பூஜை அறைக்கும் நம் வாழ்விற்கும் ஒளி தரக்கூடியது நாம் ஏற்றும் விளக்குகள் தான். வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் பெறலாம் என்பது உறுதியான ஒன்று. இப்படி நம் வீட்டிற்கு சகல செல்வங்களையும் பெற்று தரும் விளக்கினை, எந்த எண்ணெயில் ஏற்றுவது என்பது பற்றி நம்மில் எல்லோருக்கும் சந்தேகங்கள் பல உண்டு. எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

kamatchi vilakku

சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் இந்த இரண்டிலும் கண்டிப்பாக விளக்கு ஏற்றக்கூடாது. இது நமக்கு தீமையை தான் கொடுக்கும். பசு நெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பானது. வீட்டில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் மறைந்து வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழவும், செல்வ வளத்தை பெறவும் பசு நெய் தீபம் ஏற்றலாம்.

எள்ளினை ஒரு வெள்ளைத் துணியில் சிறிய முடிச்சாக கட்டி அதை நல்லெண்ணெயில் போட்டு தீபம் ஏற்றுவதன் மூலம் சனிபகவானின் ஆசியைப் பெறலாம். கண்திருஷ்டி படாமலும் இருக்கலாம். ஏழரைச்சனியில் உள்ளவர்கள் இந்த தீபத்தை ஏற்றினால் கஷ்டங்கள் குறையும்.

kamatchi vilakku

பொதுவாக வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றக்கூடாது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றுவதால் குல தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும் என்பதனை சாஸ்திரத்தில் கூறியுள்ளார்கள்.

- Advertisement -

விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றும் பொழுது நமக்கு மட்டுமல்லாமல் நம் உறவினர்களுக்கும் பலன் கிடைக்கும். செல்வம், ஆரோக்கியம், நீடித்த உழைப்பு போன்றவற்றை பெறலாம்.

vilakku deepam

நல்லெண்ணை ஊற்றி விளக்கு ஏற்றுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், நன்மையும் பெருகும். தேங்காய் எண்ணெய் விநாயகருக்கு சிறப்பானது. இலுப்பை எண்ணை சிவனுக்கு சிறப்பானது.

மேற்கொண்ட எல்லா நலன்களையும் பெற நாம் பஞ்சதீப எண்ணெயை உபயோகிக்கலாம். நல்லெண்ணெய், பசு நெய், விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் பஞ்சதீப எண்ணெய்.

Vilakku

நாம் விளக்கு ஏற்றி இறைவனை பிராத்தனை செய்யும் பொழுது, நான் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு எல்லா செல்வங்களையும் கொடு என்று கேட்காமல், அனைவரின் நலன்களையும் மனதில் கொண்டு எல்லோரும் எல்லா வகையான செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே:
தீபாவளி நோன்பு முறை மற்றும் வழிபடும் நேரம்

English Overview:
Here we have Vilaketrum murai in Tamil or Vilaketrum palangal in Tamil