வீட்டில் எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்? எந்த இடங்களில் தீபம் ஏற்றக்கூடாது? இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?

vilakku-door

தீபம் ஏற்றுவது என்பது இறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் ஒரு செயலாகும். தீபம் ஏற்றும் பொழுது தீபத்தில் எரியும் ஜோதியானது நமக்கு நல்ல சிந்தனைகளை கொடுக்கும். நமக்கு என்ன நடந்தாலும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை பிறக்கும். அத்தகைய தீபத்தை வீட்டில் எந்த எந்த இடங்களில் ஏற்றலாம்? எந்தெந்த இடங்களில் ஏற்றக்கூடாது? என்பதை இந்த பதிவின் மூலம் நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

vilakku1

தீபத்தின் ஒளியில் இருந்து பரவும் ஒளிக்கற்றைகள் வீடு முழுவதும் பரவி, வீட்டில் இருக்கும் தீய சக்திகளை வெளியேற்றிவிடும். இந்த பிரபஞ்சத்தில் நல்லவை, தீயவை என்ற இரண்டு கோணங்கள் உண்டு. வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்லவைகள் அதிகரிக்கும். கெட்டவைகள் நீங்கும். அதனால் தான் தினமும் தீபம் ஏற்றி வைப்பது மிகவும் நல்லது என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

முந்தைய காலங்களில் திண்ணை வைத்து வீடு கட்டுவது உண்டு. அங்கு மாடங்களில் விளக்கு ஏற்றுவது போன்ற அமைப்பையும் உருவாக்கி வைத்திருப்பார்கள். திண்ணைகளில் 4 விளக்கையும், மாடக்குழிகளில் இரண்டு விளக்குகளையும் வைப்பார்கள். அது போல் நிலைப்படியில் இரண்டு விளக்குகளை வைப்பது உண்டு. இப்போது இருக்கும் வீடுகளில் திண்ணைகள் எங்கே இருக்கிறது? மாட குழிகளும் அமைக்கப்படுவது இல்லை. எனவே உங்கள் வீட்டில் இருந்து இறங்கி வரும் படிக்கட்டுகளில் இரண்டு அல்லது நான்கு விளக்குகளை வைக்கலாம்.

agal-vilakku

நில வாசல் படியில் கட்டாயம் இரண்டு விளக்குகளை வைப்பது நல்லது. நில வாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எனவே நில வாசல்படியில் தீபம் ஏற்றினால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தினமும் ஏற்ற முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றி வரலாம். முற்றத்தில் நான்கு விளக்குகளும்! வாசல் நடைகளில் இரண்டு விளக்குகளும் வைப்பது வழக்கம்.

- Advertisement -

வீட்டில் பின்புறம் இடம் இருப்பவர்கள், பின்வாசல் அமைத்து வைத்திருப்பவர்கள் அங்குள்ள துளசி செடிக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். வீட்டில் தோட்டம் போன்ற பகுதிகளில் விளக்கு ஏற்றுவது மன பயத்தை நீக்கும். இந்த தீபத்தை எமனை நினைத்து ஏற்றுவது முறையாகும். எம தீபத்தை ஏற்றும் பொழுது ஆயுள் விருத்தி அதிகரிக்கும். எனவே தோட்டம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தோட்டத்தில் ஒரு விளக்கு ஏற்றுவது நன்மைகளை தரும்.

Annapoorani

அன்னபூரணி வாசம் செய்யும் சமையலறையில் தீபம் ஏற்றினால் ஏழேழு சந்ததியினருக்கும் வறுமை என்பது ஏற்படாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. எப்பொழுதும் காலையில் எழுந்ததும் சமையலை துவங்கும் முன் ஒரு அகல் விளக்கை சமையல் அறையில் ஏற்றுவது மிகவும் நன்மை தரும் செயலாகும். சர்வ மங்களங்களும் இதன் மூலம் நீங்கள் பெறலாம். ஆனால் சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய் போன்ற பொருட்களை வைத்திருப்பதால் அடுப்பிற்கு அருகில் தீபத்தை ஏற்றி விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பாதுகாப்பான இடத்தில் ஏதாவது ஒரு மூலையில் அன்னபூரணியின் படத்தை வைத்து ஏற்றினால் போதும்.

kamatchi-vilakku

அது போல பூஜை அறையில் குபேர தீபம், கார்த்திகை விளக்குகள், காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு என்று தீபத்தை ஒற்றை படையில் தீபம் ஏற்றுவது நலம் தரும். உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பூஜை அறையில் விளக்கு ஏற்றி கொள்ளலாம் ஆனால் தெற்கு திசையை நோக்கியவாறு தீபம் ஒருபோதும் ஏற்றக்கூடாது. வடக்கு நோக்கிய தீபம் செல்வ வளத்தையும், தெற்கு நோக்கிய தீபம் நல்வழியையும், கிழக்கு நோக்கிய தீபம் சகல சம்பத்துகளையும் பெற்றுக் கொடுக்கும்.