திருமணமான வீட்டில் உடனடியாக செய்யக்கூடாத 3 தவறுகள் என்னென்ன? இந்த தவறுகளை செய்தால் வீட்டில், இழப்புகள் அதிகமாக இருக்கும். உதாசீனப்படுத்தாதீர்கள்.

siruvapuri-murugan-marraige
- Advertisement -

சாஸ்த்திரம் சொல்லியும் சில தவறுகளை நாம் அறிந்து, மீறுவது கிடையாது. அறியாமல் செய்வது நமக்கு, பிற்காலத்தில் பிரச்சினையைத் தந்து விடுகின்றது. அந்த வரிசையில், திருமணமான வீட்டில், முதல் 6 மாதத்திற்கு நாம் அடுத்தடுத்து என்ன செய்யக் கூடாது, என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தவறுகளை செய்தவர்கள், பலபேர் வீட்டில், பல சிக்கல்களில் சிக்கி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாசீனப்படுத்தாதீர்கள். தயவுசெய்து திருமணம் நடந்த வீட்டில் இந்த 3 தவறுகளை இனி மறந்தும் செய்யாதீர்கள், என்ற தாழ்மையான வேண்டுகோளை வைத்து இந்த பதிவினை தொடங்கலாம்.

Hindu Marriage

திருமணமான உடனேயே உங்களுடைய வீட்டில் புதுமனை புகுவிழா வைக்கக்கூடாது. திருமணமாவதற்கு முன்பே நீங்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கலாம். திருமணமான பின்பு புது வீடு குடி போகலாம் என்று நினைத்து இருக்கலாம். ஆனால், திருமணமான பின்பு 6 மாதத்திற்கு, வீடு கட்டி புது வீட்டிற்கு குடி போக கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

இரண்டாவதாக உங்களுடைய வீட்டில் திருமணம் ஆன பின்பு, உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய, மற்ற குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா வைக்கக்கூடாது. என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால், மொட்டை அடிக்கப்பட்ட அந்த குழந்தையின் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

mottai

திருமணமான தம்பதியர்கள் ஆறு மாதத்திற்குள், காசி ராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லக்கூடாது. அந்த வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களும் இப்படிப்பட்ட இடங்களுக்கு பனித யாத்திரை செல்லக்கூடாது. இந்த மூன்று தவறுகளை செய்தால், என்ன விளைவுகள் ஏற்படும். பண விரயம், மனக் கஷ்டம், ஈடுசெய்ய முடியாத அளவிற்கு கூட சில வீடுகளில் உயிர் இழப்புகள் நேரிடும் என்று சொல்கிறது சாஸ்திரம். சொல்லுவதில் காரண காரியங்கள் இல்லாமல் இல்லை. முடிந்தவரை இந்த தவறுகளை செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

சரி, தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படிப்பட்ட தவறுகளும் உங்களுடைய வீட்டில் நடந்துவிட்டால், பரிகாரம் உள்ளதா என்று கேட்பவர்களுக்கும் இந்த பதிவில் பதில் உள்ளது. திருமணமான 6 மாதத்திற்குள் புதுமனை புகுவிழா நடத்தியிருந்தால், அவர்கள் முருகப் பெருமானை வேண்டி செவ்வாய்க்கிழமை அன்று 9 நெய் தீபத்தை, 9 வாரங்கள், வீட்டில் ஏற்றி, முருகப் பெருமானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து செவ்வாய்க்கிழமை அன்று, கோவிலுக்கு எடுத்து சென்று, நெய்வேத்தியம் செய்து, அங்கு உள்ள பக்தர்களுக்கு அந்த பிரசாதத்தை விநியோகம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

new home

திருமணமான பின்பு 6 மாதங்கள் முடிவதற்குள் உங்களுடைய வீட்டில் மொட்டை அடித்து காது குத்தும் விசேஷம் நடந்துவிட்டால், விசேஷம் நடத்தப்பட்ட அந்த குழந்தைக்கு எந்த ஒரு தோஷமும் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், தொடர்ந்து 11 நாட்கள் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று, அந்த கோவிலில் அபிஷேக தீர்த்தம் கிடைக்கும் அல்லவா, அந்த தண்ணீரை வாங்கி அந்த குழந்தையின் தலையில் தெளிக்கவேண்டும்.

- Advertisement -

agal-vilakku

இப்படியாக, திருமணமான வீட்டிலுள்ளவர்கள் 6 மாதத்திற்கு முன்பாகவே, புனித யாத்திரை சென்று வரும் சூழல் ஏற்பட்டால், என்ன செய்வது? புதன் கிழமைகளில் உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று 5 மண் அகல் தீபங்கள், நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி வைத்துவிட்டு, வெண்பொங்கலை பிரசாதமாகக் செய்து வைத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்து வரவேண்டும் என்றும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 5 வாரங்கள் இப்படி செய்ய வேண்டும். முடிந்தவரை தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தவறுகள் செய்தால் பரிகாரங்கள் செய்ய மறந்துவிடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
பல பரிகாரங்கள் செய்தும், பல கோவில்களுக்கு சென்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு கூட நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த 3 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டு விட்டாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -