- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவக்கிரகங்களின் தோஷத்தால் நம்முடைய வாழ்க்கையில் நஷ்டமுமோ கஷ்டமுமோ நிச்சயம் வராது. விநாயகரை நினைத்து தினமும் இந்த...

நவக்கிரகங்களின் தோஷத்தால் நம்முடைய வாழ்க்கையில் நஷ்டமுமோ கஷ்டமுமோ நிச்சயம் வராது. விநாயகரை நினைத்து தினமும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நவக்கிரகங்களால் நமக்கு ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள ஏதேனும் வழி உண்டா என்று கேட்பவர்களுக்கு, ஆன்மீக ரீதியான ஒரு சுலபமான வழிபாட்டு முறையும், பரிகார முறையும் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்கள், ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலனடையலாம். கிரக தோஷங்கள் என்றால் என்ன. நம்முடைய ஜாதக கட்டத்தில் சனி பகவானால் பிரச்சனை, ராகு-கேது தோஷம். நாக தோஷம். செவ்வாய் தோஷம். இப்படி கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எந்த தோஷம் உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எனக்கு எந்த தோஷமும் இல்லை. ஆனால் வாழ்க்கையில் தடைகள் இருக்கிறது, என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

கிரக தோஷங்களின் மூலம் நமக்கு உண்டாகக்கூடிய பிரச்சினைகளை தடுக்கக்கூடிய சக்தி ஆனைமுகத்தனை ஐந்து கரத்தனை என்று சொல்லப்படும், விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு உண்டு. முழுமனதோடு விநாயகரை வழிபாடு செய்தால் வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் பொடிப்பொடியாக போய்விடும். விநாயகருக்கு உகந்த ஒரு பொருளாக சொல்லப்படுவது அருகம்புல். இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

- Advertisement -

தினம்தோறும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி நம்பிக்கையோடு வழிபாடு செய்து வந்தால் நமக்கு கிரகங்களினால் வரக்கூடிய தடைகள் அனைத்தும் தகர்க்கப்படும். இது முதல் விஷயம். இது தவிர நம்முடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய இடர்பாடுகளை தடுக்க, முன்னேற்றத்தில் வரும் தடைகளை தகர்க்க, எதிலும் முன் நின்று ஜெயிக்க இந்த திலகத்தை விநாயகரை நினைத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்.

இந்த திலகத்தை தயாரிக்க நமக்கு இரண்டு பொருட்கள் தேவை. புனுகு, அருகம்புல் பொடி. இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வந்து பூஜை, அறையில் அமர்ந்து புனுகுடன் கொஞ்சமாக அருகம்புல் பொடியை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நமக்கு தேவையான திலகம் தயார். இதை விநாயகரின் படத்திற்கு முன்பாகவே வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு விநாயகரை வீட்டில் இருந்தபடியே மனதார வேண்டிக்கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட்டு கொண்டு ‘விக்னங்களை தீர்க்கும் விநாயக போற்றி’ என்று சொல்லிவிட்டு இந்த திலகத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்கி பாருங்கள்.

உங்களை வெல்ல இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்ற எண்ணம் உங்களுக்குள் வரும். மன தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிறப்பான பரிகாரத்தை பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்