விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். வாழ்க்கையில் அனைத்து செல்வ நலன்களும் உங்களை தேடி வரும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் வாங்கும் நேரம் வழிபடும் நேரம் குறித்த விளக்கம்.

vinayagar chathurthi 2023
- Advertisement -

தெய்வங்களுக்கெல்லாம் மூத்த தெய்வம் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் ஒரு அருமையான நாளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தெய்வங்களிலே அனைவருக்கும் பிடித்த தெய்வமெனில் அதுவும் இந்த விநாயகர் தான். அதுமட்டுமின்றி குலதெய்வம் இஷ்ட தெய்வம் என பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும் கூட, அவர்களும் வணங்கக் கூடிய கடவுள் எனில் அதுவும் இந்த விநாயகர் தான். அப்படியான விநாயகரை இந்த சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்தான தகவல்களைஸஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை, விநாயகர் சிலை வாங்கும் நேரம், சிலை வழிபாடு
பொதுவாக விநாயகர் சதுர்த்தி ஆனது ஆவணி மாதத்தில் தான் நமக்கு வரும். இந்த வருடம் புரட்டாசியின் முதல் நாளில் விநாயகர் சதுர்த்தி வந்திருக்கிறது. இந்த சதுர்த்தி திதியானது 18.9.2023 ஆம் தேதி காலை 11.39 மணிக்கு தொடங்கி மறுநாள் 19.9.2023 அன்று 11.50 வரை உள்ளது. இந்த வருடம் இந்த திதியும் 2 நாளில் வருகிறது. ஆகையால் இந்த இரண்டு நாளில் உங்களுக்கு எந்த நாள் விநாயகரை வணங்க வாய்ப்புள்ளதோ அந்த நாளிலே அவரை வணங்கலாம் தவறு ஒன்றும் இல்லை.

- Advertisement -

அதே போல் விநாயகரை வாங்கும் நேரத்தையும் வழிபடும் நேரத்தையும் தெரிந்து கொள்ளலாம். 18ஆம் தேதி நீங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் அன்று காலை 9 மணியிலிருந்து 10.20 மணிக்குள்ளாக விநாயகரை வாங்கி விடுங்கள். பூஜையை அன்று மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள்ளாக செய்யலாம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் பூஜை செய்து கொள்ளலாம்.

அதே போல் 19ஆம் தேதி நீங்கள் விநாயகர சதுர்த்தி கொண்டாடினால் அன்று காலை ஏழு மணி முதல் 8.45 மணிக்குள்ளாக விநாயகர் சிலையை வாங்கி விடுங்கள். அன்றைய தினம் பூஜை செய்யும் நேரம் காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை செய்யலாம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் நீங்கள் எப்போதும் வேண்டுமானாலும் பூஜை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

விநாயகருக்கு படைக்க வேண்டிய தெய்வேந்தியம்
விநாயகர் சதுர்த்தி என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது கொழுக்கட்டை ஆகையால் இவருக்கு பிடித்த கொழுக்கட்டையை நீங்கள் எப்படி செய்வீர்களோ பிடி கொழுக்கட்டை, மோதகம் பூரண கொழுக்கட்டை என எதை வேண்டுமானாலும் செய்து வைத்து படையுங்கள். அதே போல் சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்றவற்றையும் செய்து படைக்கலாம். இத்துடன் எளிமையான முறையில் பழ வகைகள் வாங்கி வைத்தும் வணங்கலாம். ஒரு சிலர் அன்று வடை, பாயாசத்துடன் சாப்பாட்டு போட்டு இந்த நெய்வேத்தியங்களையும் படையலாக வைத்து வணங்குவார்கள். அது உங்களுடைய வழக்கத்தை பொறுத்து.

பொதுவாக தெய்வங்களின் எளிமையான தெய்வம் விநாயகர் தான். அவரை ஆடம்பரமாக எதையும் செய்து வைத்து வணங்க வேண்டிய அவசியம் கிடையாது. உங்களால் முடிந்த அளவு எவ்வளவு எளிமையாக வணங்க முடியுமோ அப்படி வழிபடலாம். இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழம் வைத்தும் கூட அவரை வணங்கி வழிபடலாம். ஆனால் அருகம் புல்லும் எருக்கம் மாலையும் மட்டும் கட்டாயமாக வாங்கி வைத்து விடுங்கள். நீங்கள் சிலையாக வாங்கி இருந்தாலும் சரி உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலை அல்லது விநாயகர் படம் எதுவாக இருந்தாலும் இதை மட்டும் மறக்காமல் வைத்து வழிபடுங்கள்.

விநாயகரை பொறுத்த வரையில் இப்படித் தான் வழிபட வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது மனதார நினைத்து எளிய முறையில் வழிபாடுகளை செய்தாலே கேட்டவர்க்கு கேட்ட வரத்தை கொடுக்கக் கூடிய அற்புதமான தெய்வம். அப்படியான இவரை விநாயகர் சதுர்த்தியில் எந்த நேரத்தில் வாங்கி பூஜை செய்து வணங்குவது என்பது குறித்தான தகவல்களை அறிந்து கொள்ள இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

- Advertisement -